மே மாதம் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை கொண்டுவரப் போகிறது? உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் எண் கணிதத்தின் மூலம், இந்த மாத பலன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்!

எண் 1 – (1, 10, 19, 28)
வீடு மற்றும் காதல் வாழ்க்கையில் நன்மைகள். பெண்கள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். குடும்ப நலம் சிறப்பாக இருக்கும்.
எண் 2 – (2, 11, 20, 29)
நல்லது-கெட்டது தெரிந்து செயல்படுவீர்கள். உணர்ச்சிகள் மூலம் ஏமாற்றங்களுக்கு இடமுண்டு. கோபம் தவிர்க்க வேண்டும்.
எண் 3 – (3, 12, 21, 30)
முதலீடுகளில் லாபம். தொழில் தொடங்க நல்ல காலம். சோம்பல், கவனக்குறைவு தவிர்க்க வேண்டியது அவசியம்.
எண் 4 – (4, 13, 22, 31)
முயற்சிக்கு பலன் உண்டு. ரிஸ்க்குகளை தவிர்க்கவும். ஆரோக்கியம், வாகனம் மற்றும் மின்சாரம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
எண் 5 – (5, 14, 23)
பொறுமையுடன் செயல்பட்டால் நன்மைகள் கிடைக்கும். புதிய தொழில்கள், புதிய முயற்சிகளுக்கு ஏற்ற மாதம்.
எண் 6 – (6, 15, 24)
மிதமான வெற்றி. உறவுகள் மேம்படும். நிதி விஷயங்களில் சிக்கனம் தேவை. கூட்டு தொழிலில் வாய்ப்பு உண்டு.
எண் 7 – (7, 16, 25)
சிறப்பான மாதம். நிதானமான செயல்பாடுகள் மூலம் நன்மை. சமூக மதிப்பும் உறவுகளில் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
எண் 8 – (8, 17, 26)
சிறு சிரமங்கள் இருந்தாலும் கடைசியில் வெற்றி. வேலைப்பளு அதிகம். நிதியில் கவனம் தேவை. முதலீடு தவிர்க்கவும்.
எண் 9 – (9, 18, 27)
சவால்கள் இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி. வேலையை மாற்றும் முன் நன்கு சிந்திக்க வேண்டும்.



