Sunday, July 12, 2020
Home மருத்துவம் இயற்கை மருத்துவம் வியப்பூட்டும் மலர் மருத்துவம் - Flower Theraphy Natural Medicine

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

malar-maruthuvam-thinatamil
malar-maruthuvam-thinatamil

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் பாச். அடிப்படையில் ஆங்கில மருத்துவரான எட்வர்ட், மலர்களின் மீதான காதலால் அவற்றை ஆராய்ச்சி செய்து தன் மருத்துவ வாழ்க்கையையே திசை திருப்பிக் கொண்டார். இன்று மலர் மருத்துவம் பற்றி ஓரளவு தெரிந்திருக்க எட்வர்ட் முக்கிய காரணம். இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு சீன மலர் மருத்துவம் பலன் தருகிறது என்று சொல்கிறார்கள். நவீன விஞ்ஞானிகளாலும் இதனை மறுக்க முடியவில்லை. இதுகுறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்று அதுபற்றி நடுநிலையாக ஒரு கருத்து கூறியிருக்கிறார்கள்.

மாற்று மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அரோமா தெரபி பூக்களின் நறுமண எண்ணெயை வைத்தே செய்யப்படுகிறது. பூக்களை நேரடியாக பயன்படுத்தும் Flower Therapy-யும் தற்போது பரவலாகி வருகிறது. ஹோமியோபதி மருந்துகளுடன் மலர்களும் சேர்த்தே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி கொசுக்களைக் கட்டுப்படுத்தவும் பூக்கள் உதவும் என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். கொசுக்கள் பூக்களிலிருந்து கிடைக்கும் தேனையும் பருகி வாழ்கின்றன. இதை அடிப்படையாக வைத்து, கொசுக்களை தடுக்கும் மருந்துகளை உருவாக்கலாம் என அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

flower-medicine-thinatamil
flower-medicine-thinatamil

- Advertisement -

‘இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயல்புதான். கொசுக்கள் எல்லா மலர்களையுமே நாடுவதில்லை. குறிப்பிட்ட சில வகை நறுமண மலர்களின் தேன் மட்டுமே கொசுக்களின் விருப்பமாக இருப்பதை கண்டுபிடித்திருக்கிறோம். அந்த மலர்களின் நறுமணத்தில் நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள் இருக்கின்றனதான். அவற்றிலும் Nonanal, Lilac aldehyde என்ற இரண்டு வேதிப் பொருட்கள் கொண்ட பூக்களையே அதிகம் கொசுக்கள் தேடுகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்த இந்த வழியே போதும். எனவே, இந்த Nonanal, Lilac aldehyde வேதிப் பொருட்களை பயன்படுத்தி கொசுக்களை ஈர்த்து அழிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்’. வைரஸும், கொசுவும்தான் இப்போது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அவற்றை பூக்களைக் கொண்டே வெல்ல முடியும் என்றால் இது குறித்த ஆராய்ச்சிகளை இன்னும் வேகமாக மருத்துவ உலகம் முன்னெடுக்க வேண்டும்!

- Advertisment -

ஏனைய செய்திகள்

கல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...

அரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்..? ஆள் அடையாளமே தெரியவில்லையே..! இப்போ எப்படி...

அரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...

தினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள்...

உணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...

வெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம்! இரவு படுக்கும் முன் இதை...

சீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...

உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..

கோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline