ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள், சேர்க்கைகள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களில் சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி மாற்றுவதால் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த மங்களகரமான யோகமானது புதனின் ராசியான மிதுன ராசியில் உருவாகவுள்ளது. இந்த யோகமானது நல்ல மரியாதை, கௌரவம், செல்வம் போன்றவற்றைத் தரும்.
இப்படிப்பட்ட மகாலட்சுமி ராஜயோகம் செப்டம்பர் 24 ஆம் தேதி மிதுன ராசியில் உருவாவவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளை கிடைக்கவுள்ளன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பான அருள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பம் கிடைக்கும். தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக லட்சுமி தேவியின் ஆசியால் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். ஆனால் கூட்டு தொழில் செய்பவர்கள் தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி நிலை வலுவடையும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழிலில் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



