வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அவ்வாறு கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் புத்திகாரகனான புதன் செப்டம்பர் 23 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான கேது பயணித்து வருகிறார். இதனால் செப்டம்பர் 23 முதல் கன்னியில் புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழவுள்ளது.
அதுவும் இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளதால், அனைத்து ராசிகளிலுமே இதன் தாக்கம் காரணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். இப்படி அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளன. இப்போது புதன் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்று பாருங்கள்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் கேது புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெரிய நிதி நன்மைகளைப் பெறக்கூடும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக, கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களாக இருந்தால், நல்ல வரன் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக தடையின்றி முடிவடையும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தொழிலதிபர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வணிகர்களின் வணிகம் விரிவடையும் வாய்ப்புள்ளது. முக்கியமாக தந்தையின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். இதனால் பல வெற்றிகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக அதிர்ஷ்டம் பிரகாசித்து, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும், வெற்றிகளும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்பீர்கள். எப்பேற்பட்ட பெரிய வேலையையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக பல நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.



