Thursday, January 23, 2025

உஷார்! புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. அலட்சியம் வேண்டாம்.

- Advertisement -

உலக அளவில் ஏற்படக்கூடிய இறப்புகளுக்கான காரணங்களுடைய பட்டியல்ல முக்கிய இடத்தைக் கொண்டிருப்பது புற்றுநோய்தான். 2020 ஆம் ஆண்டுல 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்துள்ளனர்.

உஷார்! புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. அலட்சியம் வேண்டாம்.
உஷார்! புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. அலட்சியம் வேண்டாம்.

அதில் மார்புக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் விந்துப்பை புற்றுநோய் ஆகியவை பெரும்பாலான நபர்களை தாக்கக்கூடிய புற்றுநோய் வகைகளாகும்.பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்கள் அலட்சியமாக கருதப்படும் கூடிய ஒரு சில புற்றுநோய் அறிகுறிகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

- Advertisement -

நமது உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பதை தாமதமாக அறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கும் போது தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக புற்றுநோய் செல்கள் அப்பாற்பட்ட வளர்ச்சியை அடைந்து விடுகிறது. எனவே புற்றுநோய் சிகிச்சைக்கு அந்த நோயை சீக்கிரம் கண்டறிதல்தான் இருக்கிறது. ஆகவே புற்றுநோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

உங்களுக்கு ஏற்படும் கடுமையான உடல் சோர்வு என்பது புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பெரும்பாலானவர்களால் அனுபவிக்கப்படக்கூடிய ஒரு அறிகுறியாகும். புற்றுநோயானது ஒரு நபரை மிகவும் வலுவிளக்கு செய்து அவர்களின் ஆற்றலை உறிஞ்சிடும். அதன் காரணமாக இந்த சோர்வானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

இதன் கரணமாக வலி, குமட்டல், வாந்தி அல்லது மனச்சோர்வு போன்றவற்றை கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதீதமான சோர்வு இருப்பவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி அது புற்றுநோய்க்கான அறிகுறிதானா? என்று பரிசோதனை செக் செய்துக்கொள்வது நல்லது.

உங்களுக்கு உடல் எடை குறைதல் ஏற்பட்டால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுது. உடல் எடை குறைவது புற்றுநோய்க்கான முதல் அறிகுறியாக பார்க்கப்படுது. ஆனால் துரதிஷ்டவசமாக பலர் இதை அலட்சியமாக தவிர்த்துடுவார்கள். எந்த ஒரு காரணமுமே இல்லாம உடல் எடை திடீரென குறையும் பொழுது கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப அவசியம்.

சிலருக்கு உடலில் தடிப்புகள் தோன்றுதல் பிரச்சனை ஏற்படும். இதுவும் புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். லூகேமியா என்ற ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு சருமம் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் உடல் முழுவதுமாக தடிப்புகள் காணப்படும். சருமத்தின் தோலுக்கு அடியில் இருக்கக்கூடிய சிறு சிறு இரத்த நாளங்கள் உடைவதால், இந்த தடிப்புகள் உண்டாகும். உடலில் தடிப்புகள் தோன்றுதல் புற்றுநோய்க்கான அறிகுறியாக பார்க்கப்படுவதால், மருத்துவரை அணுகி புற்றுநோய்க்கான அறிகுறிதானா என்று செக் பண்ணிக்கொள்வது நல்லது.

கண்களில் வலி ஏற்படுவதும் புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். கண்களை யாரோ குத்திவிட்டது போன்ற கடுமையான வலி தோன்றுவது. கண்களில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான முக்கியமான ஒரு ஆரம்ப அறிகுறியாக பார்க்கப்படுது. இந்த அறிகுறிகளை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடுவார்கள். கண்களில் கடுமையான வலி ஏற்படுவது கண்களில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுவதால் மருத்துவரை அணுகி, இது கண்கள் சார்ந்த பிரச்சனை தானா அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியா என அறிந்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுவது புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். ஆரம்பத்தில் லேசாக இருக்கக்கூடிய தலைவலி படிப்படியாக அதிகரிச்சு தொடர்ந்து வரும். ஒருவேளை இது புற்றுநோய்க்கான அறிகுறியாக எனவே ஆரம்ப கட்டத்திலேயே நீங்க மருத்துவர் அணுகுவது அவசியம். ஏன் என்றால், இது பிரைன் டியூமர் உடைய ஆரம்ப கட்ட அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி தலைவலி வரக்கூடிய பிரச்சனையை சாதாரணமாக எண்ணிய விடக்கூடாது.

வலியுடன் கூடிய மாதவிடாய் இருக்கக்கூடிய பெண்கள் கண்டிப்பாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இது புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். வழக்கமாகவே மாதவிடாய் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் வலி மிகுந்த ஒரு நிகழ்வுதான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான ரத்த ஓட்டத்துடன் கூடிய, உங்களால தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலியை ஏற்பட்டால், கட்டாயமாக ஆலோசனை செய்வது அவசியம். ஏனென்றால் இது எண்டோமெட்ரியல் கேன்சருக்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

சாப்பிடுவதற்கு மற்றும் உணவை விழுங்குவதற்கு சிரமம் ஏற்படுவதும் புற்றுநோயோக்கான அறிகுறியாக இருக்கலாம். செரிமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படுவது. சுவாசிக்கவே சிரமப்படுவது. வயிற்றில் உப்புசம் ஏற்படுவது. மலம் கழிப்பதில் மாற்றங்கள் ஏற்படுவது. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது. கடுமையான காய்ச்சல் மற்றும் நகங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்துமே புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

எனவே மேற்சொன்ன அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகி இந்த அறிகுறிகள் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தானா என பரிசோதனை செய்துக்கொள்வது, புற்றுநோய்கள் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைச்சுக்கலாம்

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link