Wednesday, June 3, 2020
Home பொது / துணுக்குகள் முதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்... சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day

முதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்… சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day

முதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்…

முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயதான காலத்தில் வீடுகளில் இருக்கும் அவர்களை தேடிச்சென்று செவிலியர்கள் பராமரிக்கின்றனர்.

செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் (Florence Nightingale) 200-வது பிறந்த ஆண்டையொட்டி இன்று சர்வதேச செவிலியர் தினம் (International nurses day) கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

florence-nurses-day-thinatamil
florence-nurses-day-thinatamil

இதனால் முதியோர்களுக்கு அவர்கள், வளர்ப்பு மகள்களாகவே விளங்குகின்றனர். அவர்களின் தியாகம் அந்த முதியோரது குடும்பத்துக்கே நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வகையில் முதியோர் பராமரிப்பில் ஈடுபடும் செவிலியர்கள் முதியோர்கள் பராமரிப்பு பற்றி கூறியதாவது:-

- Advertisement -

வயதானவர்கள் சமுதாயத்தில் கிடைக்கும் சுகாதார சேவைகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நோய் மற்றும் நோயினால் இயலாதன்மை, இயற்கையான ஒன்று, வறுமை, மற்றும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலை ஆகியவை தடைகளாக இருந்து அவர்களை வாட்டும். அந்த தடைகளை செவிலியர்கள் தான் அறிந்து அவற்றை அகற்ற வேண்டும். முதியோர்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை தினமும் மூன்று தடவை பயன்படுத்தலாம். தினமும் குறைந்தது ஒரு துண்டு பழமாவது சாப்பிடவேண்டும். இதில் அதிக அளவு நார்சத்து அடங்கியுள்ளது.

குறைந்தது ஒருநாளைக்கு மூன்று தடவையாவது காய்கறிகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஏதாவது குடிக்க வேண்டும் என்று விரும்பினால் மிதமான சூடு உள்ள பால் ஒரு டம்ளர் அருந்தலாம். தூங்கும் அறைகள் அமைதியாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும்.சரியான வாய் பராமரிப்பு நல்ல உடல் நலத்தையும் நல்ல தோற்றத்தையும் கொடுக்கும். தினமும் காலையிலும், சாப்பிட்டதற்கு பின்னும், படுக்கைக்கு முன்பும் வாயை உப்புநீரினால் கொப்பளிப்பது சிறந்தது. பாதத்தில் பிரச்சினைகள் பொதுவாக வயதானவர்களுக்கு காணப்படும்.

நீண்ட நாள் கடுமையான உழைப்பு, பொருத்தாத காலணிகளை அணிவது, பாதங்களுக்கு குறைவான இரத்த ஓட்டம், சரியாக வெட்டப்படாத விரல் நகங்கள் மற்றும் சில நோய்கள் காரணமாக ஏற்படலாம்.குளிர்ச்சியான நிலையில் நீண்ட நேரம் இருத்தல், காலணிகளால் பாதத்தில், அழுத்தம், தற்போது அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டில் இரு….விலகி இரு என்பதோடு சத்தான ஆகாரங்களை சாப்பிடு என்பதில் முதியவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு விஷயங்களை செவிலியர்கள் தங்களது முதியோர் மருத்துவ பராமரிப்பு சேவைப்பணியில் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline