அடிக்கடி வாயு, வயிற்று போக்கு ஏற்படுகிறதா… கணைய பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்

அடிக்கடி வாயு, வயிற்று போக்கு ஏற்படுகிறதா... கணைய பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்
அடிக்கடி வாயு, வயிற்று போக்கு ஏற்படுகிறதா… கணைய பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்

நமது வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு கீழே இடப்பக்கமாக இருக்கும் இலை வடிவ உறுப்பு தான் கணையம். செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய திரவத்தை கணையம் சுரக்கிறது. அது மட்டும் இன்றி, குளுக்ககான், இன்சுலின் போன்ற ஹார்மோன்களை சுரப்பதும் கணையத்தின் வேலையாகும்.

வயிற்றின் மிக முக்கிய உறுப்பான கணையம் செரிமான செயல்முறைக்கு உதவும் நொதிகளை சுரக்கச் செய்து, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் மற்றும் குளுக்ககான் ஆகிய ஹார்மோன்கள் தான் சர்க்கரையை கட்டுக்குள் வைத்துவிட்டு உதவுகிறது. ஏதாவது ஒரு காரணத்தினால் கணையம் பாதிக்கப்படும் போது நீரழிவு நோய் என்னும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

இன்றைய மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை, சில வகை மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவற்றால் கணையம் பாதிக்கப்படலாம். இந்நிலையில் கணைய பாதிப்பை எடுத்துக்காட்டும் சில அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

வயிற்று வலி

அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி, கணைய பாதிப்பை எடுத்துரைக்கும் எச்சரிக்கையாக இருக்கலாம். செரிமானம் மோசமாக இருக்கும்போது, வயிற்று வலி, வயிற்றில் வீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. கணையம் என்சைம்களை சரியாக சுரக்காததால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உடல் எடை குறைதல்

காரணம் இல்லாமல் உடல் எடை குறைவது, கணைய பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். ஏனென்றால் கணையம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சேராது. இதனால் படிப்படியாக உடல் எடை குறைவதோடு உடல் பலவீனமும் ஏற்படும்.

அடிக்கடி ஏற்படும் வாந்தி

அடிக்கடி ஏற்படும் வாந்தி கணைய பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். செரிமானம் சரியாக இல்லை என்றால் வாந்தி ஏற்படும். கணைய பாதிப்பில் என்சைம்ங்கள் சரியாக வெளியேறாமல் செரிமான முற்றிலுமாக பாதிக்கப்படுவதால், கணையத்தால் கொழுப்பை செரிமானம் முடியாமல் வாந்தி குமட்டல் ஆகியவை ஏற்படும்.

வயிற்றுப்போக்கு

செரிமான பிரச்சனைகளில் ஒன்றான வயிற்றுப்போக்கும் பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உடல் கொழுப்பு மற்றும் புரதங்களை செரிமானம் செய்ய இயலாத போது வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

வயிற்று உப்புசம்

சாப்பிட்டவுடன் ஏற்படும் வயிற்று உப்புசம், கணைய பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறிகள். ஏனெனில் கணையம் பாதிக்கப்பட்டால், உணவை செரிமானம் செய்ய உதவும் காஸ்ட்ரிக் அமிலத்தை கணையம் சுரக்காது.

கணையத்தை வலுவாக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள்

1. காளானில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் டி2 ஆகியவை உள்ளதால் கணைய பாதுகாப்பிற்கு ஏற்ற குறைந்த கலோரி கொண்ட உணவு.

2. மஞ்சளில் உள்ள குர்குமின் கணைய பாதுகாப்பிற்கு உதவுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு கணைய புற்று நோய் வருவதையும் பெரிதும் தடுக்கும்.

3. வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு எலுமிச்சை சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் கணையம் வலுப்படும்.

4. காய்கறிகளில் இளம் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள காய்கறிகளில், பீட்டா கரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால், கணையத்தை புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

5. பயோடிக் பண்பு நிறைந்த தயிர் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, கணையத்தில் ஏற்படும் நோய் தொற்றுகளையும் தடுக்கிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles