பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் கவினுக்கு நிகழ்ந்த துயரம் கடந்த 78 நாட்களில் நடக்காத ஒன்றினை அனுபவித்து வந்துள்ளார்.

Freeze Task Started | Bigg Boss 3 Tamil Today Promo | Mugen Rao, Losliya, Sandy

வெளியில் தாய் மற்றும் குடும்பம் சிறையில் காணப்படுகின்றனர். உள்ளே லொஸ்லியாவுடனான காதலால் சற்று மகிழ்ச்சியாய் காணப்பட்டார் கவின்.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் லொஸ்லியாவின் தந்தை. இதனால் காதல்தோல்வியில் கவின் அழுதது ரசிகர்கள் கண்களே கலங்க வைத்துள்ளது.

ஒருபுறம் இந்தியஅளவில் மிகவும் ட்ராண்டாகி வந்துகொண்டிருக்கின்றார். தற்போது கவின் வெளியேறுகின்றார் என்ற தகவல் வந்துகொண்டிருக்கும் நிலையில் கவினைப் பார்ப்பதற்கு உள்ளே யார் செல்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கவின், ஷெரின், சாண்டி இவர்களின் பெற்றோர்கள் தான் இன்னும் உள்ளே செல்லாமல் இருக்கின்றனர். இதில் கவினின் அம்மா ஏற்கெனவே மோசடி வழக்கில் சிக்கி கைதாகி இருப்பதால் அவரைக் காண அவரது அக்கா மற்றும் தந்தை செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி கவினின் நண்பர்களும் இன்று உள்ளே சென்றுள்ளார்களாம்.

குறித்த நிகழ்வினை நாளைய நிகழ்ச்சியில் ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், லொஸ்லியாவின் காதல் தோல்வியால் நொந்து போயிருக்கும் இந்த சூழ்நிலையில், கவினைப் பார்க்க சென்ற நண்பர்களால் பிக்பாஸில் எதாவது ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here