
நீரிழிவு நோயை நாம் சரியான உணவுமுறை மற்றும் நடைப்பயிற்சி மூலம் சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்பது உண்மைதான். உங்களின் உணவுப் பழக்கம் சமநிலையாக இல்லையெனில் உங்கள் இரத்தச் சர்க்கரையும் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
எனவே, நீரிழிவு நோயாளி தங்களின் உணவுப் பழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு ஆரோக்கியமான காலை உணவோடு நாளைத் தொடங்குவது மிகவும் முக்கியமாகும்.
இந்நிலையில் உங்கள் காலை உணவில் ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதனால் உங்கள் வயிறு எளிதில் நிரம்பும் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
இருப்பினும், ஒரே மாதிரியான உணவை உண்ணாமல் சில நாட்களுக்குப் பிறகு உணவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். குறிபாக நீங்கள் பருவகால உணவைப் பின்பற்ற வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு காலை உணவில் பல நன்மைகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் காலை உணவில் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் நன்மை பயக்கும்.
நீரிழிவு நோயில் காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும்?
ராகி தோசை –
நீரிழிவு நோயாளிகள் ராகியை உட்கொள்ள வேண்டும். ராகி தோசை தயார் செய்து காலை உணவாக சாப்பிடலாம். இது மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ராகியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
சனா சாட் –
நீரிழிவு நோயில் சனா பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் விரும்பினால், இதை முளை கட்டியும் சாப்பிடலாம். இல்லையெனில் சனா சாட் செய்தும் சாப்பிடலாம். சாட் சுவையாக இருக்க, அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், எலுமிச்சை மற்றும் சாட் மசாலாவை சேர்த்து சாப்பிடலாம். காலை உணவுக்கு இது ஒரு நல்ல வழியாகும். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
முட்டை –
நீரிழிவு நோயாளிகள் தங்கள் காலை உணவில் முட்டையை சேர்ததுக் கொள்ளலாம். குறிப்பாக வேகவைத்த முட்டை அதிக நன்மை பயக்கும். அதேபோல் ஆம்லெட் செய்தும் சாப்பிடலாம். எண்ணெய் அல்லது நெய் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். முட்டை சாப்பிடுவதால் வைட்டமின்கள் கிடைக்கின்றன மற்றும் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும்.
உலர் பழங்கள் மற்றும் கற்றாழை சாறு –
நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிட வேண்டும். ஊறவைத்த பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்திப்பழங்களை குறைந்த அளவிலும் எடுத்துக்கொள்ளவும். இது தவிர கற்றாழை சாறும் குடிக்கலாம். கற்றாழை சாறு குடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.



