இந்த கோடைகாலத்தில் குளிர் பானங்கள் மற்றும் குளிர்ந்த நீர் பருகுவது உங்களுக்கு இதமான உணர்வைத் தரலாம். ஆனால் அவை உங்கள் உடலுக்கு எந்த நன்மைகளையும் தரப்போவதில்லை. எனவே, உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை தரும் பழங்கள் மற்றும் பழச்சாறினை பருகுவது அவசியம்.
அந்த வகையில் கோகோ வேரா என்று அழைக்கப்படும் விசேஷமாக நிர்வகிக்கப்பட்ட பான செய்முறையை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். இவை இளநீர் மற்றும் கற்றாழை சதை ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இவை அற்புதமான சுவையை கொண்டிருக்கிறது. மதுபோதை பழக்கத்தை தவிர்க்க இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
சிறிய பார்ட்டிகள், குடும்ப சந்திப்புகள், விளையாட்டு நேரங்கள் மற்றும் நண்பர்களுடன் மதிய உணவு போன்ற சந்தர்ப்பங்களில் இந்த மொக்டெய்ல் பானத்தை செய்து அசத்தலாம். மேலும் இதன் சுவாரஸ்யமான சுவைகளால் அனைவரையும் ஈர்க்கும்.
தேங்காய், கற்றாழை, கிராம்பு, எலுமிச்சை, துளசி ஆகியவற்றின் நற்குணங்கள் நிறைந்த இந்த ஆரோக்கியமான பானம் கோடைகாலத்தின் கடுமையான வெப்பத்திலிருந்து நம்மை மீட்க உதவியாக இருக்கும். இனிப்பு மற்றும் உப்பு சுவைகளை கொண்ட இந்த ஆரோக்கியமான கலவையை தயாரிக்க நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி விரிவாக காண்போம்.

கோகோ வேரா செய்ய தேவையான பொருட்கள்:
இளநீர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 5 மில்லி
லெமன் கிராஸ் – 5 கிராம்
கிராம்பு – தேவையான அளவு
தேங்காய் – 100 கிராம்
துளசி – 5 கிராம்
கற்றாழை – 10 கிராம்
ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
செய்முறை:
- இந்த பானத்தை தயாரிக்க, ஒரு புதிய இளநீரை எடுத்து அதன் மேல் ஓட்டை வெட்டி அதில் ஒரு துளை போட வேண்டும்.
- பிறகு அதில் உள்ள தண்ணீரை ஒரு கிளாசில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இப்பொது ஒரு ஸ்பூன் மூலம் இளநீரில் உள்ள தேங்காய் வழுக்கையை ஸ்கூப் செய்து அதனை ஒரு கிணத்தில் வைக்கவும்.
- அதன் பின்னர் தேங்காய் நீரில் கற்றாழை சதை, இடித்து நசுக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் லெமன் கிராஸ் ஆகியவற்றை சேர்த்து மெதுவாக கிளறவும்.
- இளநீர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் கிணத்தில் எடுத்து வைத்துள்ள தேங்காய் வழுக்கையில் இருந்து 100 கிராம் சேர்க்க வேண்டும்.
- இப்பொது இந்த பானத்தை மீண்டும் இளநீர் ஓட்டில் நிரப்பி அதன் துளைகளை மேல் ஓடு மூலம் மூடி ஒரு நாள் முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
- அடுத்த நாள் காலையில், தேங்காய் நீரை ஒரு கிளாசில் ஊற்றி அதில் ஐஸ் க்யூப்ஸ் மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து அலங்கரிக்கவும். இதனை குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.



