
கற்றாழை பல வகையான வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருளாகும். இந்த மருத்துவ தாவரத்தை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தப் படுகிறது, அதேபோல் கற்றாழை கூந்தலுக்கும் பல நன்மைகளை தரும். கற்றாழையில் அத்தியாவசிய வைட்டமின்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். இதனை பயன்படுத்துவதால், உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். நீங்கள் விரும்பினால், கற்றாழை ஜெல்லை சந்தையில் இருந்து வாங்கி உங்கள் தலைமுடியில் தடவலாம். இந்நிலையில் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற எந்தெந்த வழிகளில் கற்றாழையை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அடர்த்தியான கூந்தலுக்கு கற்றாழை
தலைமுடியில் கற்றாழையை அப்படியே தடவலாம். இந்த ஜெல்லை எடுத்து விரல்களால் முடியின் வேர்கள் முதல் முடியின் முனை வரை தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தலையில் வைத்த பிறகு, அதை நன்றாக கழுவலாம். இது முடி உதிர்வை தடுக்க உதவும், மேலும் கூந்தலுக்கு போதுமான அளவு ஈரப்பதத்தை அளிக்க உதவும், முடி மென்மையாக மாறும், அதுமட்டுமின்றி முடி அடர்த்தியாகிறது (Thick Hair), முடி நீளம் அதிகரிக்கிறது மற்றும் முடி வளர ஆரம்பிக்கும்.
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் –
கற்றாழையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து முடியில் தடவலாம். இதற்கு தேங்காய் எண்ணெயில் கற்றாழை ஜெல்லை மிக்ஸ் செய்து முடிக்கு ஹேர் மாஸ்க் (Hair Mask) போல் தடவவும். அதேபோல் இந்த கலவையை சிறிது சூடாக்கி தலைமுடியில் தடவலாம். தலைமுடியில் 20 நிமிடம் ஊற வைத்து பின் அலசவும்.
கற்றாழை மற்றும் முட்டை-
கற்றாழை ஜெல்லுடன் முட்டையை கலந்து கூந்தலில் தடவினால் கூந்தலுக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும். இது கூந்தலுக்கு நல்ல ஆழமான கண்டிஷனிங்கை வழங்குகிறது. இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழையை எடுத்து, அதில் ஒரு முட்டையை சேர்த்து, ஒன்றரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இந்த கலவையை கூந்தலில் அப்ளை செய்து அரை மணி நேரம் வைத்த பிறகு, கூந்தலை நன்றாக கழுவவும். இதனால் முடி மென்மையாகி, விரல்களிலிருந்து நழுவத் தொடங்கும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடியில் தடவலாம்.
கற்றாழை மற்றும் தேங்காய் பால் –
கற்றாழை மற்றும் தேங்காய் பால், இந்த இரண்டு பொருட்களையும் கலந்து தலையில் தடவினால் முடிக்கு ஊட்டமளித்து வளர்ச்சிக்கு உதவுகிறது. இதற்கு நான்கு ஸ்பூன் தேங்காய் பாலில் நான்கு ஸ்பூன் கற்றாழை ஜெல் (Aloe Vera Gel) சேர்க்கவும், விரும்பினால், அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். இந்த தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து, கூந்தலை கழுவி சுத்தம் செய்யவும்.