‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செவப்பி’ படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது.

யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. தனது தனிப்பட்ட வீடியோக்களின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். யூடியூபில் தொடர்ச்சியாக வீடியோக்கள் பதிவிடும் ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர். பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உள்ளார் பூர்ணிமா. அவர் வீட்டிற்குள் சென்ற நாளில் இருந்து தனது திறமைகளை நிரூபித்துள்ளார். நடனம் ஆடுவது, நடிப்பு என ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன்பு பூர்ணிமா ரவி நடித்துள்ள செவப்பி படம் வரும் பொங்கல் அன்று வெளியாகிறது.



