தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் தமிழ் 8 துவங்கப்போகும் செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான விவரத்தை இந்த பதிவில் காண்போம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ் (Bigg Boss). தமிழில், கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி கொண்ட நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி பிக்பாஸ் சீசன் 7 விருவிருப்பாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இதில், பல பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும் இதில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா இந்த சீசனின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். அதே போல் பிரதீப் ஆண்டனிக்கு பிக் பாஸ் 7 இல் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.
இவர்கள்தான் பிக்பாஸ் சீசன் 8 சீசனின் போட்டியாளர்களா?
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பல பிரபலமான நட்சத்திரங்களுடன் கூடிய விரைவில் தொடங்கவுள்ளது. பலர், இதற்கான ஆடிஷனிற்கும் வந்துள்ளனர். அதில் சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அப்படி தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பல பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தொகுப்பாளர் யார்?
இதனிடையே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி இந்த சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவர் வாங்கும் சம்பளமும் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஆரம்பம்..?
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமே தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
எங்கே படப்பிடிப்பு?
பிக்பாஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெறுவது வழக்கம். இதுவரை அனைத்து சீசன்களும் அங்குதான் நடைப்பெற்றன. இனி ஆரம்பமாக உள்ள 8 ஆவது சீசனும் அங்குதான் நடைபெறும் என கூறப்படுகிறது.