நிகழ்ச்சி துவங்கிய முதல் நாள் காதல், மறுநாள் விருந்தாளி என்று ஆரம்பத்திலேயே படுவேகமாக இருக்கிறார் பிக் பாஸ்.
இருக்காதா, நிகழ்ச்சி துவங்கி 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் மொக்கை என்று விமர்சனம் வருவதால் பிக் பாஸ் அவசரப்பட்டே ஆக வேண்டிய நிலையில் உள்ளார்.
பிக்பாஸ் ஆரம்பித்து இரண்டாவது நாளே அதிர்ஷ்ட காற்று ஈழத்து பெண் மீது வீசுவது போல அவருக்கு ஆர்மி எல்லாம் ஆரம்பித்து விட்டது.
சும்மா சும்மா காதல், கிரஷ்னு எத்தனை நாள் தான் வேடிக்கை காட்டுவீர்கள். ஏதாவது மாத்தி யோசிங்க பிக் பாஸ் என்று அதற்குள் விமர்சனம் எழுந்துவிட்டது.