அதிசயமடைய வைக்கும் வேப்பம் பூவின் நன்மைகள்

பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்… பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு…சார்.. இருக்கு.

வியாதியே இல்லாத ஒரு வரம் கிடைச்சா எப்படி இருக்கும்…? நடக்கறத பேசுங்க சார்… வெட்டியா பேச நேரமில்ல … யூஸ்புல்லா இருந்தா கேட்கலாம்… என்பீர்கள் … சரிதான்..

பரம ஏழையிடம் போய் கேட்டுப் பார் … பணத்தோட அருமை தெரியும்…
பணத்த என்ன பண்றதுன்னே தெரியாத பணக்காரன்கிட்ட கேட்டுப் பார்… ஆரோக்கியத்தோட விலை தெரியும்… னு ஒரு பேச்சு வழக்கு உண்டு… ரொம்பவும் எதார்த்தமான உண்மை ….

ஆரோக்கியத்த கெடுத்துக்காம அதே நேரத்துல தேவையான பணத்தையும் சம்பாதிக்க தெரிந்தவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்… என்பதை வியாதியால் உடல் கெட்டுப் போன பிறகே பெரும்பாலோர் உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு , அதற்குப் பிறகு தேட ஆரம்பிப்பது தெரிந்த கதை…

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

எல்லாஞ் சரி… விஷயத்துக்கு வாங்க… சார்… என்கிற உங்கள் ஆதங்கம் புரிகிறது எனக்கு..

ஆரோக்கியத்துக்கான வழிகள் ..என்று நம்ம பெரியவங்க சொல்லி வச்சுட்டு போயிருக்கறதுல , குறிப்பா இந்த பங்குனி மாதத்து அதிசயத்தை சொல்லத்தான் வந்தேன்…

வேப்பம் பூ… சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்… அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை… ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்… மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்…

இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..

பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்..

இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே..

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்… நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி…என்பதெல்லாம் தாண்டி “சுகரு “க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி… நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்… பங்குனியில் ரொம்ப அதிகம் ..

எப்படி சாப்பிட ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி … வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு… தட்ஸ் ஆல்..

இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு “நெட்”டுல இருக்கு.. படிங்க…. எப்படியாச்சும் சாப்பிடுங்க…

நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்… சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க பாஸு….

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் …என்ன ..? லேசா மெனக்கெடனும்.. அம்புட்டு தான்….

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles