மனித விரல் வித்தைகலை பிரபல யூடியூப் நிறுவனம் வீடியோ வெளியிட்டு இணையத்தில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
மனித விரல்களை மட்டும் கொண்டு நடன அசைவுகளை இணைத்து பார்ப்பவரை வியக்க வைக்கும் கலை ‘பிங்கர் கெலிடோஸ்கோப்’ என அழைக்கப்படுகிறது. இந்த கலையின் ஜப்பானை சேர்ந்த ஸ்டேடஸ் சில்வர் எனும் குழு சிறப்பாக செய்து காம்பித்துள்ளனர்.
ஜப்பானை சேர்ந்த பிரபல நடன குழுவான எக்ஸ்ட்ராப் டேன்ஸ் கிரிவ் குழுவினர் இந்த வீடியோவினை உருவாக்கியிருந்தனர்.
முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு தங்களது முதல் ‘பிங்கர் கெலிடோஸ்கோப்’ வீடியோவை இணையத்தில் பதிவேற்றி உலக மக்கள் கவனத்தை ஈர்த்தனர்.அதன் பின்னட் 30 விரல்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வீடியோ ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்தாண்டு துவக்கத்தில் மீண்டும் 30 விரல் வீடியோ ஒன்றினை மீண்டும் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.



