இளையதளபதி – தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் இது நடிகர் விஜய்க்கு சொந்தமான பட்டம் என்று. மெர்சல் படத்திற்கு பிறகு அவரை தற்போது ‘தளபதி’ என பலரும் அழைக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சி ‘இளையதளபதி’ என்ற பெயரில் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பவுள்ளனர். இதன் டீஸர் கூட சமீபத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. பாகுபலி படத்தை
விஜய்க்கு ரசிகர்களாக உள்ள மாஸ் கூட்டத்தை ஈர்க்கவே இப்படி ஒரு டைட்டிலை வைத்துள்ளார்கள் எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இது கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய பிரம்மாண்ட படைப்பு ! "#இளையதளபதி" வரும் ஜூலை 28 சனி மற்றும் ஞாயிறு இரவு 8:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.#IlayaThalapathy pic.twitter.com/KxHtsq4bjY
— Colors Tamil (@ColorsTvTamil) July 17, 2018



