நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி இடையே விவாகரத்து வழக்கு நடந்துவரும் நிலையில் அவர்கள் பிக்பாஸ் 2வது சீசன் போட்டியாளர்களாக வீட்டுக்குள் சென்றனர்.
நித்யா சென்ற வாரம் வெளியேறிய நிலையில் அவர் விஜய் டிவி மற்றும் பாலாஜி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ‘நாங்கள் இன்னும் சேரவில்லை’ என அவர் நேற்று கூறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள புதிய பேட்டியில், “பிக்பாஸ் வீட்டில் பாலாஜி இரண்டாம் வாரமே அசிங்கமாக பேசினார்.. அப்போதே யோசித்து நான் முடிவெடுத்துவிட்டேன்.. அவரிடம் இருந்து விவாகரத்து பெறவேண்டும் என்று” என கூறியுள்ளார்.
மேலும் பல வருடங்களாக அவர் இப்படி பேசுவதைதான் போஷிகா பார்த்துள்ளார், இப்போது டிவியிலும் அதையே தான் பார்க்கிறாள் என நான் வருத்தப்பட்டேன் என நித்யா தெரிவித்துள்ளார்.



