பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் நடிகை பிரியங்கா திடீரென தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரியங்காவுக்குத் திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் பிரியங்கா. அவர் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது.
அவர் திடீரென்று ஏன் இந்த முடிவுக்கு வந்தார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
தற்போது இவருடைய தற்கொலை சம்பவம் பிரபலங்கள் தாண்டி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.




