ரஜினி ஜோடியாக நயன்தாரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. நவாஸுதின் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். அனிருத் இசையமைத்தார்.

‘பேட்ட’ படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி. செளந்தர்யாவுக்கு கடந்த 11-ம் தேதி திருமணம் முடிவுற்றது. எனவே, அடுத்த படத்தில் கவனம் செலுத்தப் போகிறார் ரஜினி.

ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் அனிருத்தே இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில், நயன்தாராவை ஹீரோயினாக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, ‘சிவாஜி’ படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். மேலும், ‘குசேலன்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles