காதலர் தினத்தன்று திருமணத்தை உறுதி செய்த ஆர்யா – சாயிஷா

காதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷாவுடனான காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளார் ஆர்யா.

2018-ம் ஆண்டு சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா – சாயிஷா இணைந்து நடித்த படம் ‘கஜினிகாந்த்’. இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. மார்ச் மாதத்தில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ghajinikanth movie stills starring arya sayyeshaa and others stills thinatamil |

ஆர்யா – சாயிஷா இருவருமே இச்செய்தி குறித்து எவ்வித தகவலையுமே உறுதிப்படுத்தவில்லை. இருவருமே அமைதி காத்து வந்ததால், காதலிப்பது உண்மைதான் என மேலும் பேசப்பட்டது.

இன்று (பிப்14) காதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷா உடனான காதலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ஆர்யா. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா கூறியிருப்பதாவது:

எங்களது குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன், எங்களுடைய வாழ்க்கையின் சந்தோஷமான நாட்களை உங்களிடையே பகிர்ந்து கொள்கிறேன். எங்களது திருமணம் மார்ச்சில் நடைபெறவுள்ளது. நாங்கள் இருவரும் இணையும் இந்த புதிய பயணத்துக்கு உங்களுடைய அன்பும் ஆசிர்வாதமும் தேவை.

இவ்வாறு ஆர்யா தெரிவித்துள்ளார்.

ஆர்யாவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஆர்யா, சாயிஷா ஆகிய இருவரும் தற்போது சூர்யா நடித்து வரும் ‘காப்பான்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles