நடிகை அனுஷ்காபற்றி உடல் எடை, பிரபாஸுடன் காதல், ஒரு வருடம் படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருந்தது, திருமண கிசுகிசு என பல்வேறு விஷயங்கள் பேசப் பட்டாலும் அவரைப்பற்றிய பரபரப்பு மட்டும் இன்னும் அடங்கவில்லை. பிரபாஸை காதலிக்கும் அனுஷ்கா அவரை மணப்பதற்கு குடும்பத்தினர் சம்மதத்துக்காக காத்திருக் கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் பிரபாஸுக்கு பெண் பார்த்துவிட்டார் கள், இவர்தான் பெண் என்றுகூட புகைப்படம் வெளியானது. ஆனால் அதிலும் உண்மையில்லை என்று பிரபாஸ் தரப்பு சொல்கிறது.
சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலி இல்ல திருமண விழா நடந்தபோது பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக கலந்துகொண்டு வாழ்த்தினர். அப்படங்கள் நெட்டில் வைரலானது. கடந்த ஒரு மாதமாக இவர்களது காதல் கிசுகிசு சத்தமில்லாமலிருந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக அனுஷ்கா ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
வெளிநாட்டு பாய்பிரண்ட் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருக் கிறது. இவர்தான் அனுஷ்காவின் புதுகாதலனா என்றும், பாய்பிரண்ட்டுடன் அனுஷ்கா டேட்டிங் செய்கிறார் என்றும் வெவ்வேறு சந்தேக கேள்விகளுடன் நெட்டில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதுபற்றி விசாரித்ததில்,’அனுஷ்கா உடல் எடை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அந்த பயிற்சிகளை அளித்த உணவு ஆலோசக மருத்துவர்தான் அனுஷ்காவுடன் பேசிக்கொண்டிருக்கும் நபர் என்றும், அவரது பெயர் லுக் கவுன்டின்ஹோ என்றும் தெரியவந்தது. இந்த விவரம் வெளியான பிறகு அனுஷ்கா, பிரபாஸ் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
Tags:



