மேக்கப் இல்லாமலே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க – பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய ரஜினி : யார் அந்த நடிகை? புகைப்படங்கள் உள்ளே

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்களை மிகவும் நேர்த்தியாக வெற்றி பெற்ற இயக்குனர்களை வைத்து நடிக்க திட்டமிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் தனது அடுத்த படமான காலா படத்திற்கான டப்பிங் வேலைகளை ஓரிரு நாட்களிலேயே நடித்து கொடுத்து அசதி இருக்கிறார். 2.0 படமும் வெளிவருவதற்கு முன்னரே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

காலா படத்தில் நடித்த பிரபல நடிகையை பார்த்து ரஜினி, நீங்கள் மேக்கப் இல்லாமேலே அழகாகத்தான் இருக்கீர்கள் என்று கூறியது தற்போது யார் அந்த நடிகை என்று செயதி வைரலாக பரவி வருகிறது. அவர் வேறு யாரும் இல்ல பிரபல நடிகை சுகன்யா. சுகன்யா, ‘பறந்து செல்ல வா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். சுகன்யா என்றால் இங்கு ‘சின்னக் கவுண்டர்’ சுகன்யாவே ஞாபகத்துக்கு வருவதால், இவர் ‘சிங்கப்பூர்’ சுகன்யா அல்லது சுகன்யா ராஜா. ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருந்தவருக்கு ஓவர்நைட்டில் கிடைத்தது ‘காலா’ வாய்ப்பு. படத்தில் ரஜினியின் மருமகளாக வருகிறார்.

ஷூட்டிங் முடிந்த உடனேயே சிங்கப்பூருக்குக் கிளம்பி விட்டவர், ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை திரும்ப இருக்கிறாராம்.‘’திண்டுக்கலைப் பூர்வீகமா கொண்டது எங்க ஃபேமிலி. அப்பா சிங்கப்பூர் வந்து செட்டிலாகிட்டதால இங்க வந்துட்டோம். ஆனா என்னோட சினிமா ஆசை மறுபடியும் என்னை தமிழ்நாட்டை நோக்கி இழுத்துட்டே இருக்கு. ஆசைக்கு ஏதுங்க அளவு?, ஹீரோயின் கனவெல்லாம் கூட இருக்கு. ஆனா ’இவங்க நல்லா நடிப்பாங்களே’னு சொல்ற மாதிரி ஒரு பேரு எடுக்கணும்கிறதுதான் என்னோட உடனடி டார்கெட். அதுக்கான முயற்சியிலதான் சென்னைக்கும் சிங்கப்பூருக்குமா பறந்துட்டே இருக்கேன்’’ என்றவரின் பேச்சு ‘காலா’ பக்கம் திரும்பியது..

‘’சின்ன வயசுல ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில தலைவர் பாட்டு போடலைன்னு வீட்டுல டிவியை உடைச்சவ நான். அந்தளவு ரஜினி ரசிகை. அதனால ‘காலா’ வாய்ப்பை காலத்துக்கும் மறக்க மாட்டேன். முதன் முதலா அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுல சந்திச்சப்ப, டிவியை உடைச்ச அந்த விஷயத்தையே சொன்னேன். பலமாச் சிரிச்சவர், ‘கலர் டிவியா ப்ளாக் அண்ட் ஒயிட்டா’ன்னார். ‘டக்’னு அப்படிக் கேட்பார்னு நினைக்கலை. எனக்கே என்ன டிவின்னு ஞாபகத்துல இல்லை.

அதேபோல 1992ல் அவர் சிங்கப்பூர் வந்திருந்தப்ப அவரோட நின்னு போட்டோ எடுத்திருந்தேன். அந்த ஃபோட்டோ எப்படியோ மிஸ் ஆயிடுச்சு. சரியா 25 வருஷம் கழிச்சு அவரோட நடிக்கவே சான்ஸ். கடவுளோட கருணைதான் இது. ‘காலா’ ஆடிசன் போனப்ப அது ‘காலா’ன்னே தெரியாது. ‘கபாலி 2’ன்னு தான் கூப்பிட்டாங்க.

’காலா’ ஷூட்டிங் நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. தலைவரோட பேச்சு, சிரிப்பு, ஸ்டைல், அவர் டயலாக் பேசறது எல்லாத்தையுமே பக்கத்துல நின்னு ரசிச்சேன். திரையில அவரைப் பார்க்கறப்ப வர்ற விசில் சத்தத்துக்கு அவர் எவ்வளவு உழைக்கிறார்னு கூட இருந்து பார்க்கறவங்களுக்கு மட்டுமே தெரியுது.

படத்துல சில கேரக்டர்களுக்கு அவ்வளவா மேக்-அப் இருக்காது. எனக்கும் அப்படியே. ஆனா ஒரு ஃபேமிலி சாங் சீனுக்கு மேக்-அப் போட வேண்டி வந்தது. அந்த சீன்ல என்னைப் பார்த்தவர், ‘மேக்-அப்’ இல்லாமலேயே அழகாதான இருந்தீங்க’ன்னார். தலைவரோட ஹீரோயின்ஸ் கூட எத்தனை பேர் அவர்கிட்ட இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பாங்கன்னு தெரியலை. அன்னைக்கு நான் அடைஞ்ச் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

fgf 1 |

ஆகஸ்ட் 22 ஷூட்டிங் ஸ்பாட்ல என்னோட பிறந்தநாளை சிம்பிளா செலிபிரேட் பண்ணிட்டிருந்தேன். திடீர்னு எனக்கு எதிர்ல இருந்து தலைவர் வந்துட்டிருந்தார். என்னைக் கடந்து எங்கேயோ போகப் போறார்னு நினைச்சேன். எங்கிட்ட வந்தவர், ‘மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே’ன்னு வாழ்த்தினார். அதுக்குப் பிறகே என்னோட பிறந்த நாள் அவருக்குத் தெரிஞ்சிருக்குங்கிறது எனக்குத் தெரிஞ்சது.

suganya 07161 |

எனக்கு கேக் ஊட்டி விட்டவர், பரிசா ஒரு ருத்ராட்சை தந்தார். இமயமலைக்கெல்லாம் போயிட்டு வர்றவர்கிட்ட இருந்து அதை வாங்கினதை பெரிய பாக்கியமாக் கருதுறேன். அன்னைக்கே அந்த ருத்ராட்சை என் கழுத்துலயும் ஏறிடுச்சு. உண்மையிலேயே இதை அணிஞ்ச பிறகு என்னை நான் வேற லெவல்ல உணர்கிறேன்’’ என்கிற சுகன்யா, ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகும் முடிவில் இருக்கிறாராம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles