மாரடைப்பு, சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் புடலங்காயின் அதிசயம்.. எப்படி சாப்பிட வேண்டும்? Snake Gourd for healthy life

புடலங்காயானது பல மருத்துவ குணங்களை கொண்டது. புடலங்காய் கொடியாக வளரக்கூடிய கொடி இனத்தை சார்ந்தது. இது வீட்டு மாடிகளில் வளர்க்க ஏதுவான இருக்கும்.

புடலங்காய் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது, மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது.

புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.

புடலங்காய் இலைக்கு மஞ்சள் காமாலையை குணமாக்கும் தன்மை உண்டு. புடலங்காய் இலையுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து மூன்று காலமும் தலா 15கிராம் வீதம் சாப்பிட்டு வர குணமாகும்.

புடலங்காயில் மற்ற காய்கறியில் உள்ள மாவு சத்தை விட குறைவான மாவு சத்து கொண்டது அத்தோடு அதிகபடியான நார்சத்து உள்ளது. சக்கரை நோயாளிகள் புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவை கட்டு பாட்டில் வைக்க உதவுகிறது.

விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.

மலம் கெட்டியாகி கழிக்க முடியாதவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் மலம் எளிமையாக வெளியேறும்.

தலை முடி உதிர்வை தடுக்க, பாதிக்கபட்டு வழுக்கையான இடத்தில் முடி வளர புடலங்காய் இலை சாறு எடுத்து பாதிக்க பட்ட இடத்தில் தடவிவர முடி உதிர்வு தடுக்கபட்டு மீண்டு புதிய முடிகள் வளரும்.

உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிக அளவு அழிவுறுவதால் பித்தம் அதிகரித்து காய்ச்சலை உண்டாக்கும். இதனை தடுக்க புடலங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாறு பிழிந்து கொடுக்க காய்ச்சலை கட்டுபடுத்தும். வாந்தியை உண்டாக்கும் தன்மை உண்டு, மலேரிய காய்ச்சலை குணபடுத்தும்.

புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.

இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர். புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10 மி.லி அளவுக்கு உள்ளுக்குப் புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.

புடலங்காயுடன் சுவைக்காக வேறு காய்கள், பருப்பு வகைகள், சக்கரை போன்ற வற்றை சேர்பதால் அதன் மருத்துவ தன்மை சேர்க்கபடும் பொருளுக்கு ஏற்ப மாறிவிடும் ஆகையால் தனியாக சமைத்து சாப்பிடுவதன் மூலம் மட்டுமே மேற்கூறிய நன்மைகளை பெற முடியும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles