பேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா?.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..!

பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் ஒரு சேலஞ்ச் என்றால், அது பேஸ் ஆப் சேலஞ்ச் தான். பேஸ் ஆப் என்ற செயலியின் மூலம் அனைவரும் தங்களது புகைப்படங்களை மாற்றி பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த செயலி உங்களின் தகவல்களை திருடுகிறது என்றால் நம்பமுடிகிறதா? இது குறித்த ஓர் எச்சரிக்கை செய்தியை தற்போது பார்கலாம்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் புகைப்படங்கள் வயதான தோற்றமாகவே பதிவு செய்கின்றனர். ஆனால் அதன் விளைவுகளை பற்றி ஆராய்வதில்லை. இவர்கள் பேஸ் ஆப் மூலம் பெண்கள், ஆண்கள் என அனைவருடைய முகப்பு படங்களும் பெரும்பாலும் பதிவு செய்கிறார்கள்.

மேலும் சினிமா பிரபலங்களும் இதில் விதி விலக்கு தான். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்களின் புகைப்படங்களை இந்த செயலியில் மாற்றி பகிர்ந்து வருகின்றனர். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாக மாறி பலத்த வரவேற்புகள் குவிந்து வருகின்றன.

ஆனால் இதற்கு பின்னால் உங்களின் தகவல்கள் திருடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் ஃபேஸ் ஆப் பயன்படுத்துவது உங்கள் பிரைவசிக்கு பெரும் ஆபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ் ஆப் பயன்படுத்தினால் உங்கள் கேலரியில் உள்ள புகைப்படங்களை அந்நிறுவனம் அபகரித்துக்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இது முதல்முறை இல்லை என்றும் 2017ம் ஆண்டே இதே மாதிரியான குற்றச்சாட்டு ஃபேஸ் ஆப் நிறுவனம் மீது வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய நிறுவனம் தயாரித்த ஃபேஸ் ஆப் மூன்றாம் தர செயலிகள் மூலம் உங்களது புகைப்படங்களை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பேஸ்புக் போன்ற அதிகமானோர் பயன்படுத்தும் செயலிகளே பிரைவசி விஷயத்தில் தோற்றுப்போன நிலையில் ஃபேஸ் ஆப்பை நம்புவது கடினம் தான் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே இது போன்ற செயலிகளை பயன்படுத்தும் போது கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்…

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles