நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இதுவரை 79 நாட்கள் முடிவடைந்துள்ளது.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் என்று தான் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இரண்டாவது சீசனை ஒருவாரம் நீட்டிக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் செப்டம்பர் 24ம் தேதி முடிய வேண்டிய ஷோ செப்டம்பர் 30-ம் தேதி தான் முடியுமாம். இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் எதுவும் ரசிகர்களை அதிகம் ஈர்க்காத நிலையில் தற்போது ஒருவாரம் அதிகரித்து புதிதாக என்ன விஷயம் செய்துவிடபோகிறார்கள் என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.



