நடிகை அமலாபாலின் புதிய வைரல் வீடியோ

0
646

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள  திரையுலகில் நடிகை அமலாபால்  பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். அவரது நடிப்பில் உருவான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. மேலும் அவர் விஷ்ணுவுடன் ராட்சஷன் மற்றும் ‘அதோ அந்த பறவை போல’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த  நிலையில் அமலாபாலின் புதிய  வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அமலாபால் நடிப்பதற்கு  நேரம் ஒதுக்கியது போக, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் யோகா பயின்று வந்தார் என்பது தெரிந்ததே. இதில் யோகாவின் முக்கிய அம்சமான சிரசாசனம் என்ற தலைகீழாக நிற்கும் யோகாசனத்தை அவர் உரிய பயிற்சியாளர் உதவியுடன் கடந்த சில  மாதங்களாக பயின்று வந்துள்ளார்.

கடின பயிற்சிக்கு பின்  தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் அவர் சிரசாசனம் செய்து வருகிறார். இந்த நிலையில் பொது இடத்தில் புல்தரையில் அமலாபால் சிரசாசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த  வீடியோவில் அவர் யாருடைய உதவியும் இன்றி பக்காவாக சிரசாசனம் செய்வதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.