Saturday, April 20, 2024

சொர்க்கபூமியை நரகமாக மாற்றும் மனிதனின் சுயநலம்

- Advertisement -

உலக சுற்றாடல் தினம் இன்றாகும். இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பல்வேறு காரணிகளில் பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகையே அச்சுறுத்தும் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக கண்ணைக் கவரும் பிளாஸ்டிக் பொருள்களின் ஆதிக்கத்தில் மூழ்கி பூமியைத் தத்தளிக்க வைத்து வருகிறோம்.

பிளாஸ்டிக் மற்றும் ​ெபாலித்தீன் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுவதுடன் கடல் வளம், நிலத்தடி நீர்மட்டம், மண் வளம், விலங்கினங்கள் போன்ற அனைத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பிளாஸ்டிக் மற்றும் ​ெபாலித்தீன் பைகள் உக்குவதற்கு பல ஆண்டுகளாகும். மழைநீர் மண்ணில் புகுவதற்கு முடியாமல் போவதோடு, நிலத்தடி நீர் ஊற்றுக் கண்களை மறைத்து, தாவரங்கள் வளராமல் தடுப்பதற்கும், மழை இன்மைக்கும் காரணமாகிறது.

- Advertisement -

Contact Now!

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து மனிதர்களுக்கு பல நோய்கள் வர காரணமாவதுடன், கால்நடைகள் உட்பட இந்தப் பூமியில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் மெல்ல அழிந்து வருகின்றன. முன்பெல்லாம் கடைகளுக்குப் போனால் துணிப் பையுடன் போவோம்.கடைக்காரரும் செய்தித் தாள்களில் பொருள்களை இலாவகமாக மடித்து சணல் கயிற்றில் கட்டிக் கொடுப்பார்.

இன்று கடைகள் பெருகி விட்ட நிலையில், ஏற்கனவே ​ெபாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் பொதி செய்யப்பட்ட பொருள்களை வாங்கி வருகிறோம்.

- Advertisement -

முன்பெல்லாம் உணவகங்களில் உணவுப் பொருள்களை இலையில் மடித்துக் கொடுப்பார்கள். அவைகளை தூர எறிந்தாலும் எளிதில் உக்கி விடும். உணவு வகைகளை இலையில் மடித்தும்,திரவ உணவுகளை பாத்திரம் மற்றும் குவளைகளில் ஊற்றியும் கொடுத்த காலம் மறைந்து விட்டது.

பெரும்பாலான உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் ெபாலித்தீன் தாள்களும், பைகளுமே பயன்படுத்தப்படுகின்றன.

வாழை இலையில் உணவு சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் ஏற்படாது. இலையில் உள்ள பச்சையம் குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக், ​ெபாலித்தீன் பைகளில் கொண்டு செல்வதால், சூடு மற்றும் எண்ணெய் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான இரசாயனப் பொருள்கள் உணவுப் பொருள்களுடன் கலந்து அவை புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் தை​ெராய்ட் நோய் ஏற்படவும் காரணமாகிறது.

சில உணவகங்களில் வாழை இலை போன்ற பிளாஸ்டிக் தாள்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் சூடான உணவுகளைப் பரிமாறும்போது, அதிலுள்ள மெழுகு உணவுடன் கலக்கிறது. பச்சை நிற சாயம் உணவுடன் கலந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

இந்தப் பச்சை செயற்கை இலைகளை பயன்படுத்துவது தவறு. பிளாஸ்டிக் தாளில் சூடாக உணவுப் பொருள்களை வைத்து உட்கொள்வதும் தவறு.

கடைகளில் மட்டுமே அவசரத் தேவைகளுக்காக விற்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் போத்தல்கள் இன்று கெளரவப் பொருளாகி திருமணம் உட்பட அனைத்து விழாக்களிலும் புகுந்துவிட்டன.

பயன்படுத்தப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் போத்தல்களால்,நுளம்புகளும் புகுந்து சுற்றுப் புறங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு நோய்களைத் தருகின்றன. உலகில் சீனாவும், பங்களாதேஷும் ​ெபாலித்தீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடை செய்துள்ளன. இந்தியாவில் 40 மைக்ரானுக்கும் குறைவான பாலிதீன் பைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததியினரையும், பூமியையும் காக்க வேண்டுமென்றால் பொருள்கள் வாங்க கடைக்குச் செல்லும் போது துணிப் பைகளையே எடுத்துச் செல்ல வேண்டும்.பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவில்லையெனில், கடல் வளமும், நில வளமும், நீர் வளமும் முற்றிலும் அழிந்து விடும்.குழந்தைகளுக்கும் ​ெபாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகளைக் கற்றுத் தர வேண்டும். அரசும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

contaminacion aire -

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும், தூய்மையான நாட்டை உருவாக்கவும், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பொலித்தீன் பைகளை, மெழுகு தடவிய குவளைகளை உபயோகப்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். சூழல் மாசினால் அச்சூழலில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.

பல்வேறு வகையான இரசாயனப் பொருட்களும், தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது. தற்காலப் போக்குவரத்து வாகனங்களாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் காபன் மோ​ெனாக்சைட், கந்தக ஈ​ெராக்சைட், குளோரோ புளோரோ காபன்கள், நைதரசன் ஒக்சைட்டுகள் என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

தொழிற்சாலைகள், வயல் நிலங்கள், பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகான்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

Environmental Pollution -

மேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுகள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன.இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள், களைகொல்லிகள் முதலியவற்றின் அதிகளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அணு மின்சார உற்பத்தி, அணு ஆயுத ஆராய்ச்சிகள், அணு ஆயுத உற்பத்தி போன்ற நிகழ்வுகளால் கதிரியக்கக் கழிவுகள் உருவாகி சூழல் மாசடைகிறது.

ஒலிசார் மாசடைதல் என்பது வீதிகளில் ஏற்படும் வாகன ஒலி, வாகன ஒலிப்பான்களால் ஏற்படும் மிகுதியான ஒலி, விமான ஓசை முதலியவற்றால் ஏற்படுகிறது.

வெப்பம்சார் மாசடைதல் என்பது காடுகளை அழித்தல்,வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு போன்றவற்றால் ஏற்படுகின்றது.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று நாம் சில உறுதிமொழிகளை எடுப்பது அவசியமானது. சொர்க்கமாக இருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் வேறு யாரும் அல்ல மனிதர்களாகிய நாம் தான். நாம் என்ன செய்தோம் என்று மட்டும் கேட்காதீர்கள். பூமியை பற்றி கவலை இல்லாமல் மரங்களை வெட்டி கட்டடங்கள் கட்டுவது, வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து மண்டலம் மண்டலமாக புகையை வெளியேற்றி ஒசோன் படலத்தை கெடுப்பது என பல காரியங்களை செய்து பூமியை அழித்துக் கொண்டிருக்கும் பெருமை மனிதர்களையே சேரும்.

ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் தினத்தன்று மட்டும் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது, மரங்கள் நடுவது பற்றி பேசினால் போதாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா அதனால் என்ன என்ற அலட்சியத்தை முதலில் நாம் கைவிட வேண்டும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link