கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்க சோப்பு, பவுடர், கிரீம் போன்றவற்றை தூரமாக வைத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு குளியல் பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.
முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. சோப்பு, பவுடர், கிரீம் போன்றவற்றை தூரமாக வைத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு குளியல் பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருள்கள் :
- சோம்பு – 100 கிராம்,
- கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்,
- வெட்டிவேர் – 200 கிராம்,
- அகில் கட்டை – 200 கிராம்,
- சந்தனத்தூள் – 300 கிராம்
- கார்போக அரிசி – 200 கிராம்
- தும்மராஷ்டம் – 200 கிராம்
- எலுமிச்சை தோல் – 200 கிராம்,
- கோரைக்கிழங்கு – 200 கிராம்
- கோஷ்டம் – 200 கிராம்,
- ஏலரிசி – 200 கிராம்,
- பாசிப்பயிறு – அரை கிலோ,
- மகிழம் பூ பொடி – 200 கிராம்.\

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. இவைகளை வாங்கி தனித்தனியாக காயவைத்து அரைத்து காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும். பின் தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உங்கள் சருமம் எவ்வித பிரச்சனைகள் இன்றி அழகாக இருக்கும்.



