கும்கி, நான் சிவப்பு மனிதன், மித்ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் லட்சுமி மேனன் கடந்த ஆண்டு ஒரு படம் கூட கைவசம் இல்லாமல் ஓய்ந்திருந்தார். இந்த ஆண்டு பிரபுதேவாவுடன் யங் மங் சங் உள்ளிட்ட 2 படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் லட்சுமிமேனன் அளித்த பேட்டியின் போது பெண்களை அடிமையாக நடத்த நினைக்கும் திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: மற்றவர்களைப்பற்றி நான் பேச விரும்பவில்லை, என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது தேவையற்றது.
திருமணம் ஒரு அழகான உறவு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது நல்லதொரு உறவாக அமைய வேண்டும். திருமணத்துக்கு பிறகு பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதை என்னால் ஏற்க முடியாது. பொருளாதார ரீதியில் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்பதற்காக திருமணம் என்ற பந்தத்துக்கு எதிரானவள் கிடையாது. ஆனால் திருமணம் என்ற பெயரில் பெண்ணை அடிமைப்படுத்துவதை ஏற்கமாட்டேன். கணவர் என்பவர் அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டும்.



