கஜலட்சுமி ராஜயோகம்: பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்!

நாளை வைகாசி மாத பெளர்ணமி நாள், அரசு விடுமுறை தினமாகும். புத்தர் ஞானமடைந்த இந்த நன்னாள், இந்தியா உட்பட பலநாடுகளில் பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. பெளத்தம் மட்டுமல்ல, இந்து மதத்திலும் பெளர்ணமி மிகவும் விசேஷமான நன்னாள் ஆகும். மத மற்றும் சமய நம்பிக்கைகளின்படி வைகாசி மாத பவுர்ணமி அனுசரிக்கப்படும் நிலையில், மற்றுமொரு சிறப்பு இந்த நாளில் ஏற்படுகிறது.

வைகாசி மாத பவுர்ணமி நாளில் கிரகங்களின் அற்புதமான சேர்க்கை நடைபெறுகிறது என்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில், அதாவது புத்த பூர்ணிமா நாளில் விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

இந்த நாளில், வானில் கிரகங்களின் அமைப்பு மிகவும் சிறப்பாக அமையும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கிரகங்களின் அமைப்புப்படி, இந்த மாத பெளர்ணமி நாளன்று கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. புனிதரான புத்தரை நினைவு கூறும் புத்த பூர்ணிமா நாளில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

துலாம்

கஜலட்சுமி யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், இந்த காலகட்டத்தில், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம். வருமானத்திற்கான புதிய வழிகளும் திறக்கும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகளும் தென்படுகிறது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களை வந்து சேரலாம். பொறுப்புகள் கூடினாலும், அது எதிர்காலத்தில் நன்மைகளை வழங்குவதாக இருக்கும். அதுமட்டுமல்ல, கஜலட்சுமி அன்னையின் முழு ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்த பூர்ணிமா நாளன்று உருவாகும் கஜலக்ஷ்மி யோகத்தால் அருமையான வாழ்க்கை அமையும். பொருளாதார நிலை மேம்படும், நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்கும் சூழல் ஏற்படும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நல்ல காலம் இது. புதிய வாகனம், நிலம், வீடு போன்றவற்றையும் வாங்கலாம். பணியிடத்தில் சுமூகமான சூழல் நிலவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் உங்கள் மனக்குறை நீங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி யோகம் எதிர்பாராத நல்வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும். நீண்ட நாட்களாக ஒத்தி போட்டுவந்த வேலைகளை முடிக்க முடியும். நிதி நிலைமை மேம்படும் அளவிற்கு காரியங்கள் கைகூடும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது என்று சொன்னால் அதில் தவறில்லை.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles