ராகு பெயர்ச்சி 2024: இந்த 3 ராசிகளுக்கு டிசம்பர் வரை மனதை கெடுத்து சிக்கலில் சிக்க வைப்பார்.. கவனமாக இருங்கள்

Rahu Peyarchi 2024: ராகு பெயர்ச்சி 2024 இந்த 3 ராசிகளுக்கு டிசம்பர் வரை மனதை கெடுத்து சிக்கலில் சிக்க வைப்பார்.. கவனமாக இருங்கள் .

வேத ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய இவ்விரு கிரகங்களும் நிழல் கிரகங்கள் மட்டுமின்றி, எதிர்மறை கிரகங்களும் கூட. இந்த கிரகங்கள் ஒருவரது வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். சொல்லப்போனால் ஒருவரது மனநிலையை மோசமாக பாதித்து வாழ்க்கையையே அழிக்கக்கூடிய அளவில் மோசமான கிரகங்களாகும்.

இப்படிப்பட்ட ராகு மற்றும் கேதுவிற்கு சொந்த ராசிகள் என்று எதுவும் இல்லை. அதேப்போல் இவ்விரு கிரகங்களும் மற்ற கிரகங்களைப் போல் நேர்பாதையில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். இப்படிப்பட்ட ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ராகு 2024 ஆம் ஆண்டு முழுவதுமே இருப்பார். சாணக்கிய நீதி படி உங்க மனைவியிடம் இந்த அறிகுறி இருந்தா அவங்க உங்ககூட சந்தோசமாக இல்லையாம்…!

ராகு இந்த ராசியில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் மனதை ராகு கெடுத்து, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வைப்பார். இப்போது ராகுவின் நிலையால் 2024 டிசம்பர் வரை எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

ராகு பெயர்ச்சி 2024

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. காதலித்து வந்தால், காதலன்/காதலியுடன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்களின் வாழ்க்கையிலும் சற்று மனக்கசப்புகள் அதிகரிக்கலாம். எனவே டிசம்பர் வரை அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாக இருங்கள்.

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு பயணித்து வருகிறார். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட அதிக கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனை அதிகரித்துவிடும். குடும்ப வாழ்க்கை மிகவும் டென்சனாக இருக்கும். டிசம்பர் வரை உங்கள் பேச்சை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் பேச்சால் பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. அப்படியே பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேசினாலும், என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து பேசுங்கள்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் வரை செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும். இப்படி அதிக செலவு செய்வதாலேயே நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மேலும் இந்த ஆண்டு நீங்கள் பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்ய நினைத்தால், அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திப்பீர்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles