VJ பிரியங்கா – வாசியின் ரொமான்ஸ் இணையத்தில் ட்ரெண்டிங்!
விஜய் டிவியின் மக்களின் மனதில் குடியிருந்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, சமீபத்தில் இரண்டாம் திருமணமாக வாசி சாச்சி என்பவரை மணந்தார். தற்போது தங்களது திருமண வாழ்க்கையை இனிமையாக எடுத்து செல்வதோடு, ரசிகர்களுடன் அதன் சில தருணங்களையும் பகிர்ந்து வருகிறார்.

YO! Mrs. Deshpande Sachi… எப்போ வர்றீங்க?
வாசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்காவுடன் எடுத்துக்கொண்ட ஒரு ரொமான்டிக் செல்ஃபியை பகிர்ந்துள்ளார். அதில், “YO! Mrs Deshpande Sachi, eppo varinga?” என மிரட்டலோடு கலந்த காதல் வார்த்தைகளைப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
இரண்டாம் திருமணத்துக்குப் பிறகு முதல் பொதுவான அப்டேட்
முன்னதாக பிரியங்கா, கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமாரை திருமணம் செய்திருந்தாலும், மனக்கசப்பால் அவர்கள் பிரிந்துவிட்டனர். அந்தப் பின்னணியில், வாசியுடன் நடந்த திருமணம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் கமெண்டில் காதல் குவியல்!
பிரியங்காவும் வாசியும் இணைந்து புகைப்படம் வெளியிட்டதையடுத்து, “கியூட்டான ஜோடி”, “பெர்ஃபெக்ட் மாச்சி”, “வாழ்த்துக்கள் லவ் பேர்ஸ்” போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. பிரியங்காவின் புதிய வாழ்க்கை பயணம் மேலும் இனிமையாக தொடர ரசிகர்கள் தங்கள் ஆசீர்வாதங்களையும் பகிர்ந்துள்ளனர்.



