பிரபல நடிகையுடன் இரண்டாவது திருமணம்- உண்மையை கூறிய நடிகர் விஷ்ணு

0
490
Vishnu Vishal wiki
Vishnu Vishal wiki

#Vishnu
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் ஜெயிக்க வேண்டும் என போராடி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் விஷ்ணு, இவர் படங்கள் சில மிகவும் ஜாலியாகவே செல்லும்.

ராட்சசன் என்ற படம் மூலம் இப்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். அதேநேரத்தில் தான் அவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அடுத்ததே சில பத்திரிக்கைகளில் இவரும் நடிகை அமலாபாலும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்று கிசுகிசு வர ஆரம்பித்துவிட்டது.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், அதில் சுத்தமாக உண்மையே இல்லை, என் விவாகரத்து செய்தி வந்த நேரத்தில் அப்படி ஒரு கிசுகிசு வந்தது கஷ்டமாக இருந்தது.

ஆனால் முதன்முதலாக நம்மை பற்றி கிசுகிசு வந்ததே என்றும் இருந்தது. எல்லாருக்கும் வாழ்க்கை இருக்கிறது அதை நினைத்துக் கொண்டு எழுதினால் நன்றாக இருக்கும் என்றார்.