விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? Viratham

விரதம் (Viratham) இருப்பதால் உங்கள் மூளையில் நிறைய நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. மூளையில் உள்ள புரோட்டீனான brain-derived neurotrophic factor(BDNF) உங்கள் மூளையில் ஆரோக்கியமான நியூரான்கள் உருவாகுவதற்கும், நியூரான் செல்களுக்கிடையே உள்ள தொடர்புகளை அதிகரிக்கவும், அதற்கு நீங்கள் மேற்கொள்ளும் விரதம் தூண்டுகிறது.

மேலும் இதனால் அல்சீமர், டிமென்ஷியா, மன அழுத்தம் போன்றவைகள் வருவது குறைக்கப்படுகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனத்தெளிவை ஏற்படுத்துகிறது.

வயதாகுதல் என்பது இயற்கையின் ஓரு பகுதி அதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நீங்கள் விரதம் இருந்தால் வயதாவது தடுக்கப்படும். ஆமாங்க நம் உடலில் உள்ள HSH (human growth hormone) அதிகமாக தூண்டிவிடப்படுகிறது.

இந்த ஹார்மோன் குறைவு தான் நாம் வயதாகுவதற்கு ஒரு காரணமாம். இது மட்டும் இல்லங்க விரதத்தின் போது உங்க சீரண மண்டலத்திற்கு சில நேரம் ஓய்வு கொடுப்பதால் உங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகி விடுகிறதாம்.

நீங்கள் நம்பினால் நம்புங்கள் விரதம் உங்கள் இன்சுலின் அளவை குறைத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இதனால் டைப்-2 டயாபெட்டீஸ் பற்றிய கவலை இனி உங்களுக்கு தேவையில்லை.

சில பேருக்கு தெரியாது எப்ப பசிக்குது எப்ப சாப்பிடனும் என்று. விரதம் உங்கள் பசி செயலை தூண்டும் க்ரெலின் ஹார்மோனை சரிசெய்து உங்கள் பசியின் முறையை ஒழுங்குபடுத்துகிறது. ஏனெனில் விரதம் இருக்கும் போது பசிக்கும் முறை மறைந்து போவதாலாகும்.

விரதத்தின் போது சீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுப்பதால் உங்கள் உடல் மற்ற செயல்களுக்கு அந்த எனர்ஜியை கொடுக்கும்.

இறந்த செல்களை நீக்குதல், பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்தல், இரத்த சுத்திகரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளுமாம். இந்த செயல்கள் நேரடியாக உங்கள் சரும அழகிற்கும் உடல் வடியமைப்புக்கும் உதவுகிறதாம்.

விரதத்திற்கு சரியான பயிற்சி இல்லையென்றால் அது உங்களுக்கு துன்பமாக முடியும் . இதில் சரியான முறையை சரியான வழியில் பின்பற்றுவது மிகவும் முக்கியம். எல்லாரும் விரதத்திற்கு தயாராக முடியாது. கண்டிப்பாக கருவுற்ற பெண்கள், தாய்ப்பாலுட்டும் பெண்கள் விரதம் இருந்தால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம்.

விரதம் என்பது நீங்கள் பயப்படும் அளவிற்கான பயிற்சி கிடையாது. இதைப் பற்றிய அறிவின் மூலம் சரியான முறையில் சரியான வழியில் பயிற்சி செய்தால் நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகள் கிடைப்பது சாத்தியமே.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles