மிகவும் பிரமாண்டமாக இன்று மாலை பிக் பாஸின் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் TRP குறைந்து விட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பிக் பாஸ் கடந்த இரண்டு சீசன்களை விட குறைந்தளவு TRP ரேட்டிங் பெற்று கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதே போல் கடந்த இரண்டு சீசனை விட தற்போது பங்கேற்கும் போட்டியாளர்கள் மீது சர்ச்சைகள் அதிகம் எழுந்துள்ளது.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் போட்டியிலிருந்து வெளியேறியது பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
குறிப்பாக கமல் வரும் வார இறுதி நாளான சனி, ஞாயிறு தினத்தில் மிகவும் குறைவான TRP ரேட்டிங்கை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் விஜய் டிவி சேனல் இரண்டாம் இடத்தை தான் பெற்றுள்ளது.
முதலிடத்தில் சன் டிவி இருப்பதாக சொல்கின்றனர். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டம் என்பதால் TRP ரேட்டிங் உயரும் என்ற நம்பிக்கையில் விஜய் டிவி இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றுடன் பிக் பாஸ் முடியும் நிலையில் பொருத்திருந்து பார்ப்போம் TRP ரேட்டிங்கில் முன்னிலைக்கு செல்லுமா என்பதை.



