குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் திருவாதிரை 04.10.2018 முதல் 04.11.2019 வரை

0
852
thiruvaathirai guru peyarchi palangal
thiruvaathirai guru peyarchi palangal

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் திருவாதிரை 04.10.2018 முதல் 04.11.2019 வரை

வாய் ஜாலத்தில் மற்றவரை தோற்கடிக்கும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தொழிலில் நன்மை நடக்கும் என்பதில் ஐயமில்லை. குடும்பத்தில் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழிலில் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருந்தாலும் அல்லது மூத்த சகோதரர்களுடன் தொழில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல லாபத்தை குரு பகவான் கொடுப்பார்.

வண்டி, வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலில் இருப்போர் நல்ல வளர்ச்சியைக் காண முடியும். உத்யோகஸ்தர்களுக்கு பண விஷயங்கள் சீராகும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக் காணப்படும். பெண்களின் உடலுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகள் தேவையில்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும்.

உடனே கவனித்தால் பெரிய பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைகள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்து அதில் பரிசுகளும், ஷீல்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு மூத்த அரசியல்வாதிகள் உங்களுக்கு நல் வாக்கு  வழங்குவார்கள். கலைத்துறையினருக்கு நாடகக் கலைஞர்களும், மேடைக் கலைஞர்களும் நல்ல உயர்வான நிலையை அடைவார்கள். மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதல்ல.

பரிகாரம்: 
தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சம்பழ சாதம் செய்து நைவேத்யம் செய்யலாம்.

ஏனைய நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை இங்கே சென்று பார்வையிடுங்கள்