குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் மிருகசீரிடம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை
நினைத்ததை நிறைவேற்றத்துடிக்கும் மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியைப் பொருத்தவரை நீண்டநாட்களாக இருந்து வந்த கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் ஆடை, ஆபரணம், வாகனம் போன்ற நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம்.
தொழில் – வியாபாரத்தில் ஏற்றுமதி – இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தைக் காண முடியும். உங்களுக்கு தொழிலில் கிடைக்க வேண்டிய நியாயமான பங்குகள் நல்ல முறையில் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதால் உங்கள் நிலையும் உயரும். உத்யோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். உடன் பணிபுரிபவர்களிடம் கடன் வாங்கியிருந்தால் வரும் காலங்களில் அதை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். தொலைந்து போன சில ஆவணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் புதிய ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்கி மகிழ்வீர்கள்.
கொடுத்த கடன்கள் ஓரளவிற்கு திருப்பிக் கிடைக்கும். மாணவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகரிக்கும். மேற்படிப்பு விஷயங்கள் தள்ளிப் போய்க் கோண்டிருந்ததல்லவா இப்போது அது சரியாகி உங்கள் கல்வியைத் தொடர அழைப்புகள் வரும். அரசியல் துறையினர் தானுண்டு தன் வேலையுண்டு என்று உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள்.
கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்கள் உங்கள் பெயரை முன்மொழிவார்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.
பரிகாரம்:
நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.


