விஜய்-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில விஜய் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லன்களாக நடிகர் ராதா ரவி மற்றும் பால கருப்பையா கமிட்டாகி இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அதோடு படத்தில் மூன்றாவது வில்லன் வேடத்தில் ஒருவர் நடிக்க இருக்கிறாராம். ஆனால் அவர் யார் என்ற தகவல் சரியாக வெளியாகவில்லை.



