அஜித் பிறந்தநாளில் தல ரசிகன் கொடுக்கும் மாஸ் ட்ரீட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பு, ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பராகவும் இருக்கிறார்.

அஜித் நடிக்கும் புதிய படம் ரிலீசானால் போதும் தமிழ்நாடே திருவிழா போல காட்சி அளிக்கும். அப்படி இருக்கும்போது அஜித்தின் பிறந்தநாள் என்றால் சும்மாவா. உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி அஜித் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளுக்கு 2 மாதத்திற்கு முன்பே அஜித் பிறந்தநாளை டிரெண்டாக்கினர்.

அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அஜித் பிறந்தநாளில் மாஸான ட்ரீட் ஒன்று கொடுக்க இருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் தீவிர ரசிகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே 1-ஆம் தேதி அஜித் புகழ் பாடும் ஒரு சிங்கிள் டிராக் ஒன்று பில்லா பாண்டி படத்தில் இருந்து வெளியாக இருப்பதாக ஆர்.கே.சுரேஷ் அறிவித்திருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷின் இந்த திடீர் அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles