சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி கடந்த ஆண்டு தம்பதிகளாயினர். முன்னதாக இருவரும் படங்களில் இணைந்து நடித்தனர். திருமணத்துக்கு பிறகு ஜோடியாக நடிக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சிவா இயக்குகிறார். சமந்தாவுடன் திருமணத்துக்கு பிறகு படத்தில் இணைந்து நடிக்கவுள்ள நாக சைதன்யா பரவசம் அடைந்திருக்கிறார்.
இதுபற்றி சைதன்யா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனது மனைவி சமந்தாவுடன் மீண்டும் இணைந்து படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. அந்த சந்தோஷம் இன்னும் அதிகரிக்க அன்பு பரிசாக அவர் எனக்கு ஏதாவது தந்தாக வேண்டும் (முத்தம் தரவேண்டும் என்பதையே இப்படி உணர்த்தியிருக்கிறார்).
மீண்டும் காதல் உலகத்துக்கு எங்களை அழைத்து செல்வது சொல்லொனா இன்ப பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார். சைதன்யா, சமந்தா தம்பதிகள் என்பதால் இப்படத்தில் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



