ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக இருக்கும், பொதுவாக ஆங்கில மாதத் தொடக்கத்தை, சம்பளம் வாங்கும் நாளாக பலரும் நினைப்பதால் மகிழ்ச்சி என்றால், ஆன்மீகத்தில் மாதப் பிறப்பு என்பது வேறு விதமாக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அதிலும், ஆங்கில மாதப் பிறப்பை விட, தமிழ் மாத பிறப்பு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஆங்கில மாதம் என்பது, உலக நியதிக்காக உருவாக்கப்பட்டது, தமிழ் மாத பிறப்பு என்பது நமது ஆன்மீக, சமூக மற்றும் ஜோதிட ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது.

நாளை ஆகஸ்ட் 16ம் தேதியன்று சூரியன், மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆடி மாதமாக கணக்கிடப்படுகிறது. ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

மேஷ ராசி

குடும்பத்தில் குதூகலம் நிலவும் மாதமாக ஆடி மாதம் இருக்கும். திட்டமிட்டு குடும்பத்தை நடத்த பட்ஜெட் போட்டாலும் திடீர் செலவுகள் ஆட்டத்தைக் கலைக்கும். நிதிநிலை ஏறுமாறாக இருந்தாலும், ஆரோக்கியம் அருமையாக இருக்கும். இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட்டு நடத்த நினைத்தாலும், சூரிய பெயர்ச்சி திடீரென மாற்றங்களைக் கொண்டு வந்து பணப் பற்றாக்குறையை ஏற்படுத்துவார்.

ரிஷப ராசி

பணப்புழக்கம் தாராளாமாக இருக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும். விடா முயற்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டாலும், தனிப்பட்ட வாழ்வில் எதிர்பாராத ஏமாற்றங்கள் இருக்கும். பணிச்சுமை உங்களை நோகடிக்கும். மனதை பாதிக்கும் சில சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு உத்யோக ரீதியில் அருமையான காலம் இது. ஆனால், குடும்பத்தில் நிம்மதி இருக்காது. தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும், உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய முடியாது. திடீர் செலவுகள் வரலாம்.

கடக ராசி

ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலம் என்றாலும் மகிழ்ச்சி ஏற்படும் வகையில் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடந்தேறும். புதிய முயற்சிகளால் பொறுப்பு அதிகமாகும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது

சிம்ம ராசி

பண கஷ்டங்கள் நீங்கும். வருமானத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

கன்னி ராசி

எதிரிகளை வெற்றி கொள்ள சாதகமாக இருக்கும் ஆடி மாதத்தின் இரண்டாம் பகுதியில் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அருமையாக இருக்கும். சமூக வட்டம் விரியும். இது உங்களுக்கு நீண்ட காலத்திற்கு நன்மை அளிக்கும், மனதில் நிம்மதி பெருகும்.

துலாம் ராசி

வேலை தேடுபவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் நேரம் நன்றாக இருக்கிறது. இப்போது உங்களின் வேலையை மதித்து பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி

பணியிடத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும், மனதில் மகிழ்ச்சி நிலவும் காலம் இது. கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். சகோதர வகையில் ஒத்துழைப்பு மேம்படும். குடும்பத்தில் இணக்கமான சூழல் நிலவும்.

தனுசு ராசி

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உற்சாகமான மாதமாக இருக்கும் ஆடியில், சிந்தித்து முடிவெடுக்கவும். தனுசு ராசிக்காரர்களுக்கு பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும், கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

மகரம் ராசி

குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சங்கேதங்களை பார்த்து மகர ராசிக்காரர்களின் மனம் நிம்மதியடையும் தேவைக்கு ஏற்ப பணவரத்து இருக்கும் என்பதால் ஆன்மிக சுற்றுலா செல்லும் ஆசை உண்டாகும், அது நிறைவேறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும், சமூகத்தில் மதிப்பு உயரும்

கும்பம் ராசி

கும்ப ராசியினருக்கு பண நெருக்கடி குறையும். நம்பிக்கையை கொடுக்கும் விஷயங்கள் நடைபெறுவதால் மனதில் ஆறுதல் ஏற்படும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும், குழப்பங்கள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும் மாதமாக ஆடி மாதம் இருக்கும்.

மீனம் ராசி

மீன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அருமையானதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொண்டு நடந்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு, செலவுகள் அதிகரிக்கும்

கீழே 12 ராசிக்கும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது

Mesham Guru Peyarchi Palangal 2024 to 2025மேஷம்Rishabam Guru Peyarchi Palangal 2024 to 2025ரிஷபம்Midhunam Guru Peyarchi Palangal 2024 to 2025மிதுனம்
Kadagam Guru Peyarchi Palangal 2024 to 2025கடகம்Simmam Guru Peyarchi Palangal 2024 to 2025சிம்மம்Kanni Guru Peyarchi Palangal 2024 to 2025கன்னி


Thulam Guru Peyarchi Palangal 2024 to 2025துலாம்Viruchigam Guru Peyarchi Palangal 2024 to 2025விருச்சிகம்Dhanusu Guru Peyarchi Palangal 2024 to 2025தனுசு


Magaram Guru Peyarchi Palangal 2024 to 2025மகரம்Kumbam Guru Peyarchi Palangal 2024 to 2025கும்பம்Meenam Guru Peyarchi Palangal 2024 to 2025மீனம்

 

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles