நடிகை சன்னி லியோன் வடமாநில இளைஞர்கள் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் கால் பதித்துவிட்டார். அவர் தற்போது வீரமாதேவி படத்தில் வீரமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இதன் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. சன்னி ஏற்கனவே பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருட ஜூன் மாதத்தில் அவர் வாடகை தாய் ஒருவரை தேர்ந்தெடுத்தார்.
அந்த பெண்ணுள் சன்னி லியோன் கருமுட்டையையும், அவரது கணவர் டேனியல் வெப்பரின் உயிர் அணு செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது.
இதில் அழகான இரு ஆண் குழந்தைகள் சன்னி லியோனுக்கு கிடைத்துள்ளன. தற்போது அந்த குழந்தைகளுக்கு ஆஷெர் வெப்பர், நோவா வெப்பர் என பெயர் வைத்துள்ளனர்.
இப்படத்தை சன்னி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.



