Wednesday, June 3, 2020
Home ஜோ‌திட‌ம் உங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்! ஜோதிட சூட்சம குறிப்புகள்.

உங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்! ஜோதிட சூட்சம குறிப்புகள்.

பொதுவாகவே சமையலறை என்பது ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை சுக்கிர பகவானின் காரகத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் சமையலறையில் சில விஷயங்களை முறையாக கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். சகல ஐஸ்வர்யங்களும் ஒருசேர கிட்டும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அவ்வகையில் சுக்கிரனுடன் எந்த கிரக சேர்க்கை சமையலறையில் செல்வத்தை பெருக்கித் தரும் என்கிற சூட்சமம் தகவல்களை இப்பதிவில் காணலாம்.

சமையலறையை பொருத்தவரை எப்போதும் சுத்தமான நிலையிலும், காய்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் இவை பின்பற்றப்படுவதில்லை. இதனாலேயே அந்த வீடுகளில் செல்வம் வற்றி, வறுமை ஏற்படுகிறது. தண்ணீர் என்பது சந்திர கிரகத்திற்குரிய அம்சமாக இருக்கின்றது. சுக்கிரனுடன் சந்திரன் சேர்ந்தால் அங்கு பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும். இதனால் தான் சமையல் அறை காய்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

எப்போதும் தண்ணீர் சிந்திக் கொண்டே இருப்பது மிகவும் மோசமான காரியமாகும். இது மிகப்பெரும் செல்வ செழிப்பை குறைக்கவல்ல ஆற்றல் படைத்தது. எப்போதும் சமையலறையில் மட்டும் தண்ணீரை சிந்தக்கூடாது. சிலர் குடிப்பதற்காக தண்ணீர் எடுக்கின்றேன் என்று கால் வாசி தண்ணீரை கீழே சிந்தி விடுகின்றனர். பண்டைய காலங்களில் சமையலறையில் பாத்திரம் விலக்கும் முறை இருப்பதில்லை. வீட்டில் கொல்லைப்புறத்தில் தான் தேய்ப்பார்கள். இதனால் அவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தனர்.

சமையலறையில் தண்ணீரின் உபயோகம் குறைவாக இருப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். இது ஜோதிட சூட்சம குறிப்பாகும். பாத்திரம் விலக்குகிறேன் என்று சமையல் அறை முழுவதும் ஈரமாக்கி விடுகின்றனர். இந்த விஷயத்தை ஒழுங்காக கடைபிடித்தால் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். வறுமை நீங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமையலறையில் வடகிழக்கு மூலை என்பது மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் நவதானியத்தையோ அல்லது வெந்தயத்தையோ திறந்த நிலையில் வைப்பதால் தன, தானியம் குறைவின்றி சமையலறையில் நிறைந்து காணப்படும்.

- Advertisement -

ஒருபுறம் அரிசி மூட்டையும், தானியங்களும், மளிகைப் பொருட்களும், எண்ணெய் வகைகள் போன்றவையும் குறைவின்றி வற்றாமல் எப்போதும் இருக்கும். எனவே வடகிழக்கு மூலை பகுதியில் ஒரு பாத்திரத்தில் திறந்த நிலையில் நவதானியத்தை போட்டு வையுங்கள். இந்த தானியத்தை சமையல் செய்யும்போது அவ்வபோது உபயோகப்படுத்திக் கொண்டு இருங்கள். நமது முன்னோர்கள் எல்லாம் அடுப்பங்கரையில் சமையல் செய்யும் பொழுது தண்ணீரை பயன்படுத்தி கழுவி விடுவதில்லை. அதற்கு மாறாக மாட்டுச்சாணம் வைத்து தான் மொழுகி வைப்பார்கள்.

இதனால் இங்கு தண்ணீரின் பயன்பாடு குறைவாக இருந்தது. அதேபோல சமையல் செய்யும்போது விறகு அடுப்பில் இருந்து புகை ஏற்பட்டு, அக்கரும்புகை அடுப்பின் பின் சுவற்றில் படிந்துவிடும். இது சுக்கிரனுடன், சனி பகவானின் சேர்க்கையை உண்டாக்கும். சுக்கிரனுடன் சனியின் சேர்க்கை அளப்பரிய செல்வ வளத்தை கொடுக்கும். அடுப்பின் பின்புறத்தில் எப்போதும் கருமை இருப்பது வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும்.

இன்று நிலைமை மாறி சுத்தம் செய்கிறேன் என்ற பெயரிலும், அழகு என்ற பெயரிலும் பல்வேறு வண்ணப்பூச்சுகள் மூலம் கருமையை நீக்கி விடுகிறோம். இன்று இருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமில்லை என்றாலும், அதற்கு பதிலாக கருமை நிறத்தாலான வண்ணங்கள் பூசுவதாலும், கருமை சார்ந்த டைல்ஸ் போன்றவையும் ஒட்டி வைப்பதாலும் நன்மைகள் உண்டாகும். இதனால் சுக்ர, சனி சேர்க்கை ஏற்பட்டு செல்வ வளத்தை குடும்பத்தில் உண்டாக்கித் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

 

Here we have Kitchen vastu remedies in Tamil. Samayalarai tips. Samayalarai tips in Tamil. Samayalarai vastu. Samayalarai vastu in Tamil

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline