Wednesday, June 3, 2020
Home மருத்துவம் இயற்கை அழகு முகத்தில் உள்ள முகப்பரு நீங்க, துவாரங்கள் நீங்க, தோல் சுருக்கம் வராமல் இருக்க, வித்தியாசமான முறையில்...

முகத்தில் உள்ள முகப்பரு நீங்க, துவாரங்கள் நீங்க, தோல் சுருக்கம் வராமல் இருக்க, வித்தியாசமான முறையில் ஐஸ் மசாஜ்.

பொதுவாகவே பெண்களுக்கு முகத்தில் முகப்பரு வருவது இயற்கை தான். சில பேருக்கு அந்த முகப்பரு நாளடைவில் மறைந்து விடும். சில பேருக்கு தழும்பாக மாறும். சில பேருக்கு அந்த இடங்களில் சின்ன சின்ன துவாரங்கள் ஏற்பட்டு விடும், கூடிய விரைவில் சுருக்கம் விழுந்து, இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைந்து விடுவார்கள். அதாவது தோல் சுருக்கம், நம்முடைய நிறத்தையும் குறைத்துவிடும். பளபளப்பையும் குறைத்துவிடும்.

These-are-the-incredible-benefits-of-taking-icecubes-massage-thinatamil
These-are-the-incredible-benefits-of-taking-icecubes-massage-thinatamil

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக நம் வீட்டிலேயே சில பொருட்களை சேர்த்து, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஐஸ் க்யூப்ஸ் என்று சொல்லப்படும் ஐஸ் கட்டிகளை தயார் செய்து, தினம்தோறும் முகத்தில் மசாஜ் செய்து வந்தாலே போதும். முகம் கண்ணாடி போன்று பளபளப்பாகும். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த ஐஸ் கியூபை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்?

வீட்டிலேயே ஐஸ் க்யூப் தயாரிக்க தேவையான பொருட்கள்.

  • வேகவைத்த சாதம்-3 ஸ்பூன்
  • ரோஸ்வாட்டர்-1 கப்
  • காய்ச்சாத பால்-1/2 கப்
  • புதினா இலை-10
- Advertisement -

இதற்கு தேவையான பொருட்கள் இவ்வளவுதான். முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் வேக வைத்த சாதத்தை மூன்று ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிதளவு ரோஸ்வாட்டர் ஊற்றி நன்றாக மைய அரைத்து கொள்ள வேண்டும். கையை வைத்து பிசைந்து கொண்டாலும் சரி. குழவையில் போட்டு, மைய மசித்துக் கொண்டாலும் சரி. உங்கள் இஷ்டம் தான். ஆனால் கொழகொழவென்று குழந்தைக்கு சாதம் ஊட்டுவது போல பக்குவம் வர வேண்டும்.

இந்தக் சாதக் கலவையோடு மீதமுள்ள ரோஸ் வாட்டரையும், காய்ச்சாத பாலை சேர்த்து, புதினா இலைகளை துண்டு துண்டாக வெட்டி இதோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்பு ஐஸ் ட்ரேயில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த நீர்ம கலவையை ஊற்றி, ஃப்ரீசரில் வைத்தால், இரண்டே மணி நேரத்தில் மசாஜ் செய்ய ஆரோக்கியமான ஐஸ் க்யூப்ஸ் தயார். மொத்தமாக நீங்கள் தயாரிக்கும் இந்த நீர்ம கலவையானது, ஒரு ஐஸ் ட்ரேவை நிரப்பும் அளவிற்கு வந்தால் போதும்.

உங்கள் ஃப்ரீசரில் தயாரித்து இருக்கும் ஐஸ் க்யூப்ஸ் இல், ஒவ்வொன்றாக தினம்தோறும் எடுத்து, முகத்திற்கு மசாஜ் செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு நமக்கு ஒரு ஐஸ்கியூப் மட்டுமே தேவையானது. ஒரே ஒரு ஐஸ் கியூபை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு, முகத்தில் வைத்து வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். அந்த ஐஸ் கியூப் கரையும் வரை மசாஜ் செய்யலாம். மீதமுள்ள ஐஸ் கியூப்ஸை ஃப்ரீசரிலேயே வைத்துவிட்டு, தினம்தோறும் எடுத்து பயன்படுத்திக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

இந்த ஐஸ் க்யூப் மசாஜானது, உங்களுடைய முகத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தை ஆரோக்கியமாக பளபளப்பாக மாற்றி விடும். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு இருந்தாலும், நாளடைவில் நீங்கிவிடும். அதை கண்கூடாக காணலாம். சின்ன சின்ன துளைகள் நாளடைவில் மறைந்துவிடும். முகப்பரு வந்த இடத்தில் அடையாளமே தெரியாமல் சுத்தமாக மறைந்து விடும். பிரிட்ஜில் இருக்கும் ஒரு ட்ரே ஐஸ் க்யூப் முழுவதும், தீர்வதற்குள் உங்களது முகத்தில் கட்டாயம் நல்ல மாற்றம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

உங்களது முகம் முழுமையான பளபளப்பை அடைந்தவுடன் வாரத்திற்கு மூன்று முறை இந்த முறையைப் பின்பற்றினாலே போதும். எப்பொழுதும் உங்கள் முகம் இளமையாக இருக்கும். முயற்சி செய்து தான் பாருங்களேன்! பெண்கள் என்றாலே அழகுதான். அந்த அழகை மேலும் மெருகூட்ட சுலபமான சிறந்த முறையில் இதுவும் ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline