அந்தரங்க வீடியோ குறித்து மனந்திறந்த நடிகை ரேஷ்மா!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது அந்தரங்க வீடியோ வெளியானது பற்றியும் அதனை தனது குடும்பத்தினர் எப்படி அணுகினார்கள் என்பது பற்றியும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

‘வம்சம்’ ‘வாணி ராணி’ ‘மரகத வீணை’ ‘ ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தற்போது விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனிடையே, திரைதுறையிலும் காலடி பதித்த ரேஷ்மா இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவரை மேலும் பிரபலமாக்கியது. அதனைத்தொடர்ந்து அண்மையில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸிலும் நடித்தார்.

இந்த நிலையில் இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “ என்னுடைய சகோதரி திடீரென்று ஒரு நாள் போன் செய்து என்னுடைய செக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது என்று கூறினார். உடனே நான் அமெரிக்காவில் இருக்கிறேன், எனக்கு ஆளே இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி என்னுடைய வீடியோ ரிலீஸ் ஆகும். அந்த வீடியோவை முதலில் எனக்கு அனுப்பு என்றேன். அதனை என்னுடைய அம்மா என்னுடைய சகோதரியிடம் சொல்லி கேட்க சொல்லி இருக்கிறார்.
அதன் பின்னர் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. அது முழுக்க முழுக்க மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ என்று சொல்லி, என்னுடைய குடும்பத்தினருக்கு புரிய வைத்தேன். என்னுடைய அப்பா தயாரிப்பாளர். என்னுடைய சகோதரர் நடிகர். என்னுடைய குடும்பம் சினிமா குடும்பம்.

அதனால் நான் சொன்னதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் திரைப்பின்னணியில் இல்லாத ஒரு எளிய பெண்ணுக்கு இது நடந்தால் அவர் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார். கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார். ஏன் தற்கொலை வரைக்கு கூட சென்றிருக்கலாம். என்னுடைய குடும்பம் இதனை அவ்வளவு அருமையாக அணுகினார்கள்” என்று அவர் அதில் பேசி இருக்கிறார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles