தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் மெரினா, மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், டான் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர்.

இவர் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதையடுத்து, தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
இதிலிருந்து அவர் சிறிது காலம் ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதில் அவர் ‘என்பு அன்பு சகோதரர்களே. நான் டுவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கவுள்ளேன். விரைவில் திரும்பி வருவேன். என் படங்கள் படங்கள் குறித்த அறிவிப்புக்களை என் குழுவினர் பதிவிடுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்