பட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு, வெட்கமாக இருக்கிறது: ரம்யா நம்பீசன்

0
1328
Sibiraj, Remya Nambeesan and Andhraj, Sathyaraj and others At The Sathya Press Meet

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று நான் சொல்லவில்லை என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளனர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ ரெட்டி பெரும் புயலையே கிளப்பிக் கொண்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து ரம்யா நம்பீசன் கூறியிருப்பதாவது,

சக நடிகைகள்
திரையுலகில் உள்ள சில மோசமான விஷயங்கள் பற்றி என் சக நடிகைகளும், தோழிகளும் பேசியதை நான் மறுக்கப் போவது இல்லை. அதிர்ஷ்டவசமாக நான் அந்த தொல்லைக்கு ஆளாகவில்லை. பட வாய்ப்பு நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக உள்ளேன். எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் என் தோழிகள் இந்த பிரச்சனைகளை சந்தித்துள்ளனர் என்பதை நினைக்கும்போது வெட்கமாக உள்ளது.

பட வாய்ப்பு
நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக உள்ளேன். எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் என் தோழிகள் இந்த பிரச்சனைகளை சந்தித்துள்ளனர் என்பதை நினைக்கும்போது வெட்கமாக உள்ளது.

எனக்கு இல்லை
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் எனக்கு அப்படி நடக்கவில்லை என்கிறேன். இந்த பிரச்சனையை தீர்க்க இது குறித்து பேச வேண்டும்.

அனைத்து துறை
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது. பெண்கள் தைரியமாக இருந்து அது பற்றி பேச வேண்டும் என்கிறார் ரம்யா நம்பீசன்