Thursday, April 24, 2025

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

- Advertisement -

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் –
பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே பொறுப்புகள் தலைமேல் வந்து வீழ்வதால் குடும்ப சூழ்நிலையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும். தீட்டும் திட்டங்கள் அவ்வப்பொழுது தடைபட வாய்ப்புண்டு. ஆனால், இடைவிடாது உழைப்பர். இந்த எழுத்துகளில் பெயர் துவங்குவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிந்தால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பிறர் துன்பத்தை தனக்கு வந்தது போல் நினைத்து அவர்களுக்கு உதவுவர். தற்போதைய நிலையை விட உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

அன்பான இவர்களுக்கு அடிக்கடி துன்பங்கள் வந்து ஒரு மகானைப் போன்று மனதை மாற்றிவிடும். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து தெய்வீகத்தில் அதிகபட்ச நம்பிக்கை அல்லது நம்பிக்கை குறைவு கொண்டவர்களாக இருப்பர். அனைத்து துறையிலும் ஆர்வமாக உழைப்பர். இவர்களிடம் மன உறுதி பெற்றவர்களை நோக்கி நல்ல நேரம் தேடிவரும். எங்கு பணியாற்றினாலும் அங்கு இவர்கள்தான் ஆதிக்கம் பெற்றிவராயிருப்பர். பல பேருக்கு உதவிகரமாக இருக்கும் இவர்களுக்கு, யாவரும் உதவமாட்டார்கள். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் சென்று பணம் பெறலாம் என்று துர்போதனை கூறும் நண்பர்கள் சில வேளைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு.

- Advertisement -

மனம் ஒரு நிலைப்படாமலும், முடிவெடுக்க முடியாமலும் பல காரியங்கள் சிதைந்து போகலாம். யாருடனும் நெருங்கிய பழகமாட்டார்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி சிக்கல் அல்லது விபத்தில் மாட்டிக் கொள்வர். பொருள் விரையம் அடிக்கடி ஏற்படுவதால் மனம் சஞ்சலமடையும், சாஸ்திர, சம்பிரதாயங்கள் அத்துப்படி, ஆனால், முற்போக்குவாதி போல் தன்னைக் காட்டிக் கொள்வர்.

- Advertisement -

இரும்பு சம்பந்தமான துறை, மருத்துவம், கிரானைட், சினிமா, எண்ணெய், பெட்ரோல், கெமிக்கல் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றவை. இவற்றில் இருந்தால் பெரும் பொருள் சேர்ப்பர். அழகான தோற்றமிருந்தும் இவர்களுக்கு இளவயதில் திருமணம் நடப்பதில்லை. போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் வாய்ப்பு வெகுவேகமாக கிடைக்கும். கவனம் தேவை.

- Advertisement -

ஏதேனும் ஒரு காரியத்தை பகீரதப் பிரயத்தனம் செய்து முடித்தவுடன் அடுத்த பிரச்னை தலைதூக்கும். வாழ்வில் இன்பங்களை விட துன்பங்களைக் களைவதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்வர். சாதாரண காரியங்களைக் கூட அதிக முயற்சி செய்தால் தான் முடிக்க முடியும். சிறந்த நிர்வாகத் திறமை பெற்ற இவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதே இல்லை.

இவர்கள் 8, 17, 26 தேதிகளில் பிறந்திருந்தால், கடும் மன உளைச்சலையும், இளவயதில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போவதும், தொழிலில் இருப்போருக்கு நிர்வாக தொந்தரவுகளுக்கு வழக்குகளும், கல்வித் தடைகளும் ஏற்படலாம். இந்த தேதிகளில் பிறந்த மகான்களுக்கு இது பொருந்தாது.

ஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link