கொரோனா ஊரடங்கில் இருந்து பல நடிகைகளும், சீரியல் பிரபலங்களும் வீட்டிலிருந்தபடியே புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், பகல் நிலவு சீரியல் நாயகி ஷிவானி நாராயணன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர் நடிகையான சித்ரா சமீபத்தில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த படத்திற்கு ரசிகர் ஒருவர் கவர்ச்சி புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என கேட்டுள்ளார்.
அதற்கு, பதிலளித்த சித்ரா அதுபோன்ற படங்களை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படிப்பட்ட படங்கள் வேண்டும் என்றால் 2000-ல் பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு செல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
உடனே அந்த கமெண்டிற்கு மற்ற ரசிகர் ஒருவர் ஷிவானியை தானே சொல்றீங்க என கூற, உடனே சர்ச்சையாக மாறியது.
இதைக்கண்ட ஷிவானி சித்ரா மீது கோபப்பட்டு, “என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் எனது ரசிகைதான். மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார்” என்று பகிர்ந்து சித்ராவை கண்டித்துள்ளார்.
மேலும், கெட்ட வார்த்தையிலும் திட்டினார். ஷிவானிக்கு சித்ரா என்ன பதில் அளிக்கப் போகிறாரோ? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுபோல் இருவரின் ரசிகர்களும் இந்த பதிவுகளை வைரலாக்கி மோதலை பெரியதாக்கியுள்ளனர்.